கார் வைத்திருப்பவர்களுக்கு ஜெயில்; இந்த 3 தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள்

கார் வைத்திருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய தவறுகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 27, 2022, 05:04 PM IST
  • கார் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
  • இந்த தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள்
  • மீறினால் பிரச்சனையை சந்திக்க நேரிடும்
கார் வைத்திருப்பவர்களுக்கு ஜெயில்; இந்த 3 தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள் title=

Car Owners Must Avoid These Three Mistakes: உங்களிடம் கார் இருந்தால், கார் உரிமையாளரின் பொறுப்புகளைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உண்மையில், ஒரு கார் உரிமையாளராக, நீங்கள் பல விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் உங்கள் சிறிய தவறு பணச் செலவை உருவாக்கும். மேலும், அந்த தவறு நிதி இழப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நீங்கள் சிறைக்கு செல்லும் அபாயத்தையும் ஏற்படுத்திவிடும். அதனால்தான், அனைத்து கார் உரிமையாளர்களும் தவிர்க்க வேண்டிய மூன்று தவறுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

காரை வேறொருவருக்கு கொடுக்க வேண்டாம்

உங்களைத் தவிர வேறு யாருக்கும் காரைக் கொடுக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் விஷயம் வேறு. ஆனால் வெளியாட்களுக்கு கார் கொடுப்பதை தவிர்க்கவும். ஏனென்றால், வேறு யாரோ ஒருவர் உங்கள் காரை எடுத்துச் சென்று ஏதாவது குற்றத்தைச் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கார் உரிமையாளர் என்பதால் காவல்துறை முதலில் உங்களைப் பிடிக்கும். நீங்கள் காரின் சட்டப்பூர்வ உரிமையாளர். எனவே, அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் சட்ட சிக்கலில் சிக்கலாம்.

போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம்

எப்போதும் போக்குவரத்து விதிகளை பின்பற்றவும். விதிகளைப் பின்பற்றுவதன் மூலம், இரண்டு விஷயங்கள் நடக்கின்றன, ஒன்று- உங்களைத் தொந்தரவு ஏற்படாது. இரண்டாவது போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி பயணம் செய்வது பாதுகாப்பான போக்குவரத்து சூழலை உருவாக்குகிறது. இதனால் மற்றவர்களும் சாலையில் எளிதாக பயணிக்க முடியும். மேலும், பல போக்குவரத்து விதிகளை மீறினால் சிறைக்கு செல்லவும் வாய்ப்புகள் உள்ளது.

காரை பராமரிக்க

வாகனப் பராமரிப்பை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். எப்பொழுதும் காரைப் பராமரித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் காரை நீங்கள் அடிக்கடி பராமரிக்கும்போது உங்களுக்கு அதனைப் பற்றிய தெளிவு இருக்கும். உங்களிடம் பராமரிப்பு குறைவாக இருந்தால், எந்த நேரத்திலும் விபத்துகளை சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. சரியான நேரத்தில் சர்வீஸ் செய்யுங்கள். இது காரின் ஆயுளை அதிகரிப்பதோடு, நல்ல ஓட்டுநர் அனுபவத்தையும் கொடுக்கும்.

மேலும் படிக்க | 5G ஆல் ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு காத்திருக்கும் தலைவலி

மேலும் படிக்க | பிரதமருக்காக விரைவில் வாங்கப்படும் விலையுயர்ந்த மின்சார கார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News