Spyware Alert: மெசேஜ், பாஸ்வேர்டு திருடும் ஸ்பைவேர்... வீடியோ, கால் ரெக்கார்டும் செய்யுமாம்
புதிதாக இறங்கியிருக்கும் `SpyNote` ஸ்பைவேர் செயலி, யூசர்களின் வங்கித் தகவல் போன்ற முக்கியமான தரவைத் திருடலாம் மற்றும் ஆண்ட்ராய்டு ஃபோன்களை குறிவைத்துக் கொண்டிருக்கிறது.
ஸ்பைநோட் எனப்படும் புதிய மால்வேர், எந்தவொரு சாதனத்திலும் இருப்பதே தெரியாது. இது எப்போது உங்கள் மொபைலுக்குள் வருகிறது, என்னென்ன செய்கிறது என்தையெல்லாம் யூசர்களால் கண்டுபிடிக்க முடியாது. அத்தகைய ஆபத்தான ஸ்பைவேர் இப்போது இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது. இதனை இணைய பாதுகாப்பு நிறுவனமான எஃப்-செக்யரி தான் எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்படி, இந்த போலி செயலியானது வங்கித் தகவல் போன்ற முக்கியமான பயனர் தரவைத் திருடலாம் மற்றும் முதன்மையாக ஆண்ட்ராய்டு தொலைபேசிகளை குறிவைக்கிறது என தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் பெர் அமித் தம்பே பேசும்போது, ஸ்பைநோட் இந்த ஸ்பைவேர், எஸ்எம்எஸ் உள்ளிட்ட ஸ்பைவேர் கொண்ட லிங்குகள் மெசேஜ் மூலம் பரவுகிறது. பயனர்கள் Google Play உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் மூலம் உங்களுக்கு தேவையான செயலிகளை பதிவிறக்க வேண்டும். இணையத்தில் மூன்றாம் தரப்பு இணைய பக்கங்களில் இருந்து செயலிகளை ஏதேனும் பதிவிறக்கம் செய்தால் இந்த ஸ்பைவேர் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும்.
மேலும் படிக்க | 56GB டேட்டா... அன்லிமிடட் டேட்டா - ஜியோவின் பம்பர் ப்ரீபெய்ட் திட்டம்!
ஆண்ட்ராய்ட் மொபைலில் எப்படி நுழைகிறது?
ஆண்ட்ராய்டு சாதனத்தில் ஆப்ஸ் (ஸ்பைவேர்) நிறுவப்பட்டதும், அது தன்னை இயல்பாகவே மறைத்துக்கொள்ளும். ஒரு முறை ஒரு ஆண்ட்ராய்டு மொபைலுக்குள் நுழைந்துவிட்டால் இந்த ஸ்பைவேர் இருப்பதை கண்கண்டறிவது கடினம். F-Secure தகவல்படி, SpyNote ஒரு ஆண்ட்ராய்டு மொபைலுக்குள் இருந்தால், ஸ்கிரீனில் லேட்டஸ்ட் என கொடுக்கப்படும் தகவல்களை காண்பிக்காது.
ஸ்பைநோட் பயனர் தரவை எவ்வாறு திருடுகிறது?
இந்த ஸ்பைவேர், நிச்சயமாக, பயனர்களின் தனியுரிமையையும் ஆக்கிரமிக்கிறது. ஏனெனில் இது தொலைபேசி அழைப்புகளைப் பதிவுசெய்யும். பதிவுசெய்யப்பட்ட கோப்புகள் .wav கோப்பு வடிவத்தில் சேமிக்கப்பட்டு, இணைய ஹேக்கர்களுக்கு அனுப்பும். இந்த ஸ்பைவேர் இருக்கும் ஒருவருக்கு அழைப்பு வரும்போது, போனின் நிலை மாறுவதை உணரலாம். மேலும் உடனடியாக உங்களின் ஆடியோவை பதிவு செய்ய தொடங்கிவிடும். என்கிறது F-Secure நிறுவனம்.
கூடுதலாக பயனர்களின் தகவல்களை திருட அனைத்து செயல்பாடுகளையும் படம்பிடித்து .jpeg கோப்புகளை உருவாக்கி அதனை ஹேக்கர்களுக்கு அனுப்பும். அக்டோபர் 2022-க்குப் பிறகு இந்த ஸ்பைவேரின் மோசடிகள் அதிகரித்துள்ளதாக எப் செக்யூர் நிறுவனம் தெரிவித்துள்ளது. நீங்கள் இந்த மோசடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் எந்தவொரு தேவையற்ற லிங்குகளையும் கிளிக் செய்யக்கூடாது. அங்கீகரிப்படாத செயலிகளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடாது.
மேலும் படிக்க | கேமிங் பிரியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்... தள்ளுபடியில் வெறித்தனமான மொபைல்களை வாங்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ