Issue In Apple iPhone: உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் வாடிக்கையாளர்கள் பலரும் தங்கள் ஐபோன்களில் ஒரு விசித்திரமான சிக்தலை சந்தித்து வருவதாக தொடர்ந்து புகாரளித்துள்ளனர். அதாவது அந்த ஐபோன்களில் காணப்படும் பிரச்சனை என்னவென்றால், அவர்களின் மொபைல்கள் தானாகவே ஆஃப் ஆகி, இரவில் ரீஸ்டார் ஆவதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தப் பிரச்னை பார்க்கும்போது ஆரம்பத்தில் சிறிய விஷயமாகத் தோன்றினாலும், இது பரவலாக தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, பல ஐபோன்கள் நீண்ட காலத்திற்கு முடக்கப்பட்டிருக்கும் எனவும் பயனர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.


ஐபோன்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்


மேலும் இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட சம்பவங்களை விசாரித்தபோது, ஐபோன் மாடல்கள் இரவில் தற்காலிகமாக நிறுத்தப்படும் பிரச்சனை குறித்து பல தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சிக்கல் அலாரங்கள் மற்றும் பிற ஐபோன் அம்சங்களை சீர்குலைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. Reddit சமூக வலைதளத்ததில் ஒரு நீண்ட பதிவில், ஒரு பயனர் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | ஆப்பிள் ஐபோனுக்கு வந்த திடீர் எச்சரிக்கை மெசேஜ்... குழப்பத்தில் மக்கள் - என்ன விஷயம்?


அவர் தனது வீட்டில் உள்ள இரண்டு வெவ்வேறு ஐபோன் அலாரங்கள் செயலிழக்கத் தவறியதாகக் கூறினார். பல பயனர்களும் இதே போன்ற சிக்கல்களை அதில் புகாரளித்தனர். இந்த சிக்கல் மென்பொருள் (Software) சிக்கலாக இருக்கலாம், ஆனால் ஆப்பிள் நிறுவனம் இதுவரை இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும். https://zeenews.india.com/tamil/technology/iphone-15-series-this-usb-type-c-port-can-destroy-your-device-see-the-allegations-465935


மீண்டும் மீண்டும் ரீஸ்டார்ட்


மற்றொரு Reddit பயனர் அவரது பதிவில், பல ஐபோன்கள் இரவில் சில மணிநேரங்களுக்கு ஆஃப் ஆவதாக எச்சரித்துள்ளார். அவருக்கு நடந்த சம்பவத்தை அவர் விவரித்தார். அதாவது, அலாரத்திற்கு 1 நிமிடம் முன்பு தொலைபேசி மீண்டும் இயக்கப்பட்டது என்று பயனர் கூறினார். மேலும் மற்றொரு பயனர் தனது ஐபோன் இரவு 3 மணி முதல் காலை 7 மணி வரை தானாகவே ஆஃப் ஆனதாக தெரிவித்தார். அவரது அலாரம் அடித்தவுடன், அவர் தனது சிம் பின்னை மீண்டும் உள்ளிட வேண்டியதைக் கவனித்தார். தனக்கு இப்படி நடப்பது இது முதல் முறையல்ல என்றும் அந்த பயனர் கூறினார்.


பதில் இல்லை


இருப்பினும், இந்த சிக்கல் புதிய ஐபோன் 15 சீரிஸ் மொபைல்களுக்கு மட்டுமே இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பழைய ஐபோன் மாடல்களின் பல பயனர்களும் இதே போன்ற புகார்களை பகிர்ந்துள்ளனர். இந்தச் சிக்கல் iOS 17-இல் ஏற்படக்கூடிய bug உடன் தொடர்புடையதாக இருக்கலாம். இந்த bug பேட்டரி பயன்பாட்டுப் புள்ளிவிவரங்களைப் பாதிக்கலாம், இதனால் ஐபோன்கள் நீண்ட காலத்திற்கு தானாகவே ரீஸ்டார் ஆகலாம் என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், எல்லா பயனர்களும் இந்த சிக்கலை எதிர்கொள்வதில்லை, அது இரவில் மட்டுமே நடக்கிறது. இந்த விவகாரம் குறித்து ஆப்பிள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, விரைவில் இதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. 


மேலும் படிக்க | கண்ணீர் விடும் ஐபோன் 15 பயனர்கள்... இந்த கார் வைத்திருப்பவர்களுக்கு தலைவலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ