கண்ணீர் விடும் ஐபோன் 15 பயனர்கள்... இந்த கார் வைத்திருப்பவர்களுக்கு தலைவலி

Apple iPhone 15 Issues: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 15 சீரிஸ் மொபைல் தொடர்பான மற்றொரு புதிய சிக்கல் ஒன்றும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 4, 2023, 12:17 PM IST
  • கடந்த மாதம் ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அதன் விற்பனை தொடங்கியதில் இருந்து புகார்களும் வர தொடங்கின.
  • அனைத்து புகார்கள் மீதும் ஆப்பிள் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
கண்ணீர் விடும் ஐபோன் 15 பயனர்கள்... இந்த கார் வைத்திருப்பவர்களுக்கு தலைவலி title=

Apple iPhone 15 Issues: கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனத்தால் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் புதிய புதிய பிரச்னைகள் தினமும் வந்த வண்ணமே உள்ளன. ஐபோன் 15 மாடலின் பிரச்னைகளின் எண்ணிக்கை இப்போதைக்கு குறையாது என்கிறார்கள் நெட்டிசன்கள். அந்த அளவிற்கு ஐபோன் 15 மாடலில் பிரச்னைகள் காணப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 15 மொபைலில், அதிக வெப்பம் உட்பட பல சிக்கல்களை எதிர்கொள்வதாக அதன் பயனர்கள் தெரிவிக்கின்றனர். இது மட்டுமல்லாமல், சமூக ஊடக தளங்களில் பயனர்கள் தொலைபேசியின் உருவாக்கத் தரம் குறித்தும் புகார் அளித்திருக்கின்றனர்.

வாடிக்கையாளர்களின் குமுறல்

புதிய ஐபோன் சீரிஸ் மாடல்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை ஆப்பிள் நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் அந்த பிரச்னைகளை சில மென்பொருள் அப்டேட்கள் மூலம் விரைவில் சரிசெய்வதாகவும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து, மிகுந்த எதிர்பார்ப்புடன் புதிய ஐபோன்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதில் காணப்படும் பிரச்சனைகளை X தளத்தில் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க | கூகுளுக்கு ஆப்பு வைக்கும் ஆப்பிள்... அதுவும் இந்த மெயின் விஷயத்தில் - விவரங்கள் இதோ!

அந்த வகையில், ஐபோன் 15 மொபைல் தொடர்பான மற்றொரு புதிய சிக்கல் ஒன்றும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த பிரச்னையின் காரணமாக BMW கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் சற்று அச்சத்திற்கு உள்ளாகலாம் என தெரிகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 மொபைல், BMW கார்களில் காணப்படும் வயர்லெஸ் சார்ஜிங்கில் இணைக்கப்படும் போது எழுந்த இந்தச் சிக்கலை வாடிக்கையாளர் ஒருவர் பதிவு செய்துள்ளார். https://zeenews.india.com/tamil/technology/how-to-identify-the-fake-appl...

பிரச்னை இதுதான்...

பல BMW கார் உரிமையாளர்கள் ஐபோன் 15 சீரிஸின் இந்த புதிய சிக்கலை சமூக ஊடக தளங்களில் புகாரளித்து வருகின்றனர். அதன்படி, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட இணையதளம் ஒன்று (Macrumours) வெளியிட்ட அறிக்கையின்படி, ஐபோன் 15 பயனர்கள் BMW காரின் வயர்லெஸ் சார்ஜிங்கில் தங்களின் மொபைலை சார்ஜ் செய்யும்போது, மொபைலின் NFC (Near Field Commucincation) அம்சம் வேலை செய்வதை நிறுத்திவிடுகிறது என தெரிவிக்கப்படுகிறது. பயனர்கள் தங்கள் மொபைலை BMW காரின் வயர்லெஸ் சார்ஜரில் சார்ஜ் செய்ய வைத்தவுடன், அவர்கள் தங்கள் ஐபோன் மொபைலின் Wallet செயலியில் "Could Not Set Up Apple Pay" என்ற பிழை செய்தியைப் பெறுவதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் பதில் என்ன?

இது தொடர்பாக பல பயனர்கள் அளித்த புகார்களை அடுத்து, ஆப்பிள் அந்த பயனர்களின் மொபைல்களை மாற்றியுள்ளது. இந்த சாதனங்களின் NFC Chips தோல்வியடைந்ததாக கண்டறியப்பட்டது. இந்தச் சிக்கல் பெரும்பாலான பயனர்களின் ஐபோன் 15 Pro மற்றும் ஐபோன் 15 Pro Max மொபைல்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய டைட்டானியம் மொபைல்களில், புதிய 3nm A17 Pro Chip தான் பொருத்தப்பட்டுள்ளது. எனினும், போனில் இந்த பிரச்சனை எதனால் ஏற்பட்டது என அந்நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி, எந்த BMW கார் மாடலின் வயர்லெஸ் சார்ஜர் இந்த சிக்கலை எதிர்கொள்கிறது என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மேலும் படிக்க | இது உங்கள் ஐபோனையே எரித்துவிடும்... எழும் எச்சரிக்கை - என்ன விஷயம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News