உலக அளவி்ல் முன்னணி வர்த்தக சமூக வலைதளமான லிங்க்ட்-இன் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. லிங்கட்-இன் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. உலகில் உள்ள முன்னணி தொழிலதிபர்கள் இந்நிறுவனத்தில் ஆன்லைன் வாயிலாக வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இந்நிறுவனத்தை உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளதாகவும் மற்றும் இதற்கான அதிகாரப்பூர்வமாக நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இதைக்குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச்செயலார் சத்தியநாதெல்லா கூறியது, இந்நிறுவனத்தை வாங்குவது குறித்து நீண்ட நாட்களாக எனது சிந்தனையில் இருந்து வந்தது. தற்போது அந்த கனவு நிறைவடைந்துள்ளது என்றார்.