BSNL Offer: இந்த சலுகையில் கிடைக்கும் 75 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி, 225GB இலவச டேட்டா
ஜனவரி 31, 2022 வரை உள்ள இந்த சலுகையில், நிறுவனத்தின் மிகவும் பிரபலமான நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றில், பயனர்களுக்கு 75 நாட்களுக்கான கூடுதல் செல்லுபடி கிடைக்கும்.
அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) தனது வாடிக்கையாளர்களுக்கு குடியரசு தின சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது. இதில் நீங்கள் 225 ஜிபி இணையத்தை இலவசமாகப் பெறலாம்.
BSNL தனது வாடிக்கையாளர்களுக்காக கொண்டுவந்துள்ள 'குடியரசு தின ஆஃபர் 2022' சலுகை, ஜனவரி 31, 2022 வரை இருக்கும். இந்தச் சலுகையைப் பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.
BSNL: குடியரசு தின சிறப்பு சலுகை
சில நாட்களுக்கு முன்பு, நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, பிஎஸ்என்எல் தனது பயனர்களுக்கு 'குடியரசு தின ஆஃபர் 2022' என்ற சிறப்புச் சலுகையை வழங்கியது. ஜனவரி 31, 2022 வரை உள்ள இந்த சலுகையில், நிறுவனத்தின் மிகவும் பிரபலமான நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றில், பயனர்களுக்கு 75 நாட்களுக்கான கூடுதல் செல்லுபடி கிடைக்கும்.
திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள்
இந்த சலுகையில் கிடைக்கும் திட்டம் ஒரு வருடாந்திர திட்டமாகும். BSNL இன் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) ரூ.2,399 என்ற விலையில் உள்ளது. இது 365 நாட்கள் செல்லுபடியாகும். இந்தத் திட்டத்தில், நீங்கள் பொதுவாக ஒவ்வொரு நாளும் 3 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதி மற்றும் அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றின் பலனைப் பெறுவீர்கள்.
ALSO READ | Recharge: குறைந்த விலையில் ஆஃபர்களை அள்ளி வழங்கும் BSNL..!
சலுகையில் 225ஜிபி டேட்டாவை இலவசமாகப் பெறலாம்
இந்தச் சலுகையின் கீழ், ஜனவரி 31க்கு முன் இந்தத் திட்டத்தை நீங்கள் வாங்கினால், இந்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 75 நாட்கள் அதிகரிக்கும். அதாவது இந்த சலுகையால், இந்தத் திட்டம் 365 நாட்களுக்குப் பதிலாக 440 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும். இது மட்டுமின்றி, இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 3ஜிபியின் படி 225ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும். இதனுடன், 75 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் மொத்தம் 7,500 எஸ்எம்எஸ்-கான வசதியும் கிடைக்கும்.
BSNL இன் இந்த சலுகை (BSNL Offer) ஜனவரி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகையால், பிப்ரவரியில் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், இந்த கூடுதல் செல்லுபடியாகும் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காது.
ALSO READ | இவ்வளவு கம்மியா? மலிவான திட்டங்களை ரகசியமாக அறிமுகம் செய்தது BSNL
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR