இவ்வளவு கம்மியா? மலிவான திட்டங்களை ரகசியமாக அறிமுகம் செய்தது BSNL

ரூ.200க்குள் வழங்கப்படும் அனைத்து புதிய திட்டங்களும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகின்றன, ரூ.347 திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. 

Written by - ZEE Bureau | Last Updated : Jan 20, 2022, 04:23 PM IST
  • BSNL இன் ரூ.184 திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
  • பிஎஸ்என்எல்லின் ரூ.185 திட்டமும் பிரமாண்டமானது.
  • அதிகமான மக்கள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களாக மாறி வருகிறார்கள்.
இவ்வளவு கம்மியா? மலிவான திட்டங்களை ரகசியமாக அறிமுகம் செய்தது BSNL

BSNL Prepaid Plans: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) இந்தியாவில் நான்கு புதிய பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, ரூ.200க்கு கீழ் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களையும், ரூ.347க்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை மீடியம் டர்ம் செல்லுபடியுடன் அறிமுகம் ஆகியுள்ளன. ரூ.200க்குள் வழங்கப்படும் அனைத்து புதிய திட்டங்களும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகின்றன, ரூ.347 திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டங்களின் பலன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

BSNL இன் ரூ.184 திட்டம்
BSNL இன் ரூ.184 திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படும். இது தவிர, அனைத்து நெட்வொர்க்கிலும் தினமும் வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதி வழங்கப்படுகிறது. 1ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 80kbps ஆக இருக்கும். கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசுகையில், Lystn போட்காஸ்டுக்கான அணுகல் திட்டத்துடன் வழங்கப்படும்.

BSNL இன் ரூ.185 திட்டம்

பிஎஸ்என்எல்லின் ரூ.185 திட்டமும் பிரமாண்டமானது. இதில், பயனருக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் 1ஜிபி/நாள் டேட்டாவும் வழங்கப்படும். இதன் மூலம், 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும்.  1ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 80kbps ஆக இருக்கும். திட்டத்துடன் பண்ட்லிங்க் ஆஃப் சேலஞ்ச் அரினா மொபைல் கேமிங் சர்விஸ் ஆன் ப்ராக்ரசிவ் வெப் எபிபி வசதியும் வழங்கப்படுகிறது.

ALSO READ | Jio வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த வழியில் இலவசமாக கிடைக்கும் 43gb data

BSNL இன் ரூ.186 திட்டம்

ரூ.186 திட்டத்தில், பயனருக்கு 28 நாட்கள் செல்லுபடி கிடைக்கும். இதிலும் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ரூ.184 மற்றும் ரூ.185 திட்டங்களில் கிடைக்கும் பலன்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, இது பி.எஸ்.என்.எல் (BSNL) ட்யூன்ஸ் மற்றும் ஹார்டி கேம்களுக்கான அணுகலைப் பெறும். 1ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 80kbps ஆக இருக்கும்.

BSNL இன் ரூ.347 திட்டம்

ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில், பயனர்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகிய வசதிகளைப் பெறுகிறார்கள். இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவையின் கூடுதல் நன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது BSNL

ஏர்டெல், வோடபோன்-ஐடியா (Vodafone Idea) மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் கடந்த ஆண்டு நவம்பரில் தங்கள் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. மறுபுறம், BSNL அதன் திட்டங்களின் விலையை அதிகரிக்கவில்லை, அது தொடர்ந்து புதிய திட்டங்களை வழங்கி வருகிறது. அதனால் அதிகமான மக்கள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களாக மாறி வருகிறார்கள்.

ALSO READ | WFH செய்பவர்களுக்கு சூப்பர் செய்தி: அதிரடி திட்டத்தை அறிமுகம் செய்தது BSNL

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News