BSNL Offer: நீங்கள் பிஎஸ்என்எல் பயனராக இருந்தால், நிறுவனம் உங்களுக்கு 4 ஜி சிம் கார்டை இலவசமாக வழங்கும். ஆம்!! நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 4 ஜி சிம் கார்டை வழங்குவதாக அறிவித்துள்ளது. எனினும், இந்தச் சலுகையின் செல்லுபடியாகும் கால அளவு 30 செப்டம்பர் 2021 வரை மட்டுமே என்பது குறிப்பிடத்க்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சலுகை எந்த பயனர்களுக்கு கிடைக்கும்? இதை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.


இலவச சிம் பெற என்ன செய்ய வேண்டும் ?


மற்ற மொபைல் ஆபரேட்டரிடமிருந்து பிஎஸ்என்எல்-க்கு (BSNL) மாறுகிற பயனர்களும் புதிய வாடிக்கையாளர்களும் மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும். இந்த நடவடிக்கையின் மூலம், நிறுவனம் மேலும் அதிகமான பயனர்களை ஈர்க்க முயற்சி செய்கிறது. இது தவிர, புதிய மற்றும் எம்.என்.பி பயனர்கள் புதிதாக சிம் வாங்கும்போது, அவர்களது முதல் ரீசார்ஜ் குறைந்தபட்சம் ரூ.100-க்கானதாக இருக்க வேண்டும்.


ALSO READ: BSNL சிறந்த ரீசார்ஜ் திட்டம்: 90 நாள் செல்லுபடியாகும், இன்னும் பல நன்மைகள்


முன்னர் சிம்முக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது


முன்னதாக நிறுவனம் 4 ஜி சிம் கார்டுக்கு ரூ .20 வசூலித்தது. ஆனால் இப்போது அதன் புதிய பயனர்களை ஈர்க்க இந்த நடவடிக்கைகளை நிறுவனம் எடுத்துள்ளது. நிறுவனம் இலவச சிம் கார்டை அளிக்கிறது.


இந்த வழியில் நீங்கள் 4 ஜி சிம் கார்டை இலவசமாக பெறலாம்


இதைப் பெற, வாடிக்கையாளர்கள் (BSNL Customers) பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுக வேண்டும். அடையாள சான்று மற்றும் முகவரி சான்று (Address Proof) போன்ற ஆவணங்களை இங்கே வாடிக்கையாளர்கள் கொண்டு செல்ல வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள பிஎஸ்என்எல் சில்லறை விற்பனையாளர் கடைகளுக்கும் செல்லலாம். மிக முக்கியமாக, இந்த சலுகை கேரள வட்டத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


பி.எஸ்.என்.எல் அறிக்கை


பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. நிறுவனம் 1 ஜூலை 2021 முதல் 30 செப்டம்பர் 2021 வரை 4 ஜி சிம் கார்டு சலுகையை இலவசமாக வழங்குகிறது. இதன் மூலம், நிறுவனம் தனது மாதாந்திர சிம் விற்பனை, பயனர் தளம் மற்றும் வருவாயை அதிகரிக்க விரும்புகிறது. இதற்கு முன்பே, நிறுவனம் இந்த சலுகையை அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் கடைசி தேதி 30 ஜூன் 2021 வரை இருந்தது.


ALSO READ: Vi, BSNL, Jio: 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் மிகச்சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR