ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை ஒருபுறம் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணங்களை அதிகரித்து வரும் நிலையில்,  பிஎஸ்என்எல் அதை தனக்கு சாதகமாக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் அதிக சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிஎஸ்என்எல் சேவையில், 11 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்தனர். அதே நேரத்தில், ஜியோ மிகவும் பாதிக்கப்பட்டது. இப்போது TCS (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) உடன் கூட்டு சேர்ந்துள்ள BSNL, இறுதியாக இந்தியாவில் அதன் 4ஜி சேவைகளை தொடங்க தயாராக உள்ளது. எனினும் இந்தியாவில் 4ஜி அறிமுகம் குறித்த தேதியை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.


பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவை சுதந்திர தினத்தன்று தொடங்கப்படலாம்


BSNL 2022 சுதந்திர தினத்தில் 4G இணைப்பை அறிவிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, ​​பிஎஸ்என்எல் 3ஜி இணைப்பு மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி வரும் நிலையில், இதற்கான கட்டணம் குறைவு. இருப்பினும், ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல ஆண்டுகளாக 4ஜி சேவைகளை வழங்கி வருகின்றன, 2023ல் 5ஜி வசேவைகள் அறிமுகமாகும். இந்தியா முழுவதும் 1 லட்சம் டெலிகாம் டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.


மேலும் படிக்க | ஃபிளிப்கார்ட் சலுகை! 32 இன்ச் ஸ்மார்ட் டிவியில் அதிரடி தள்ளுபடி


பிஎஸ்என்எல் நுகர்வோர் நலத்துறை இயக்குநர் சுஷில் குமார் மிஸ்ரா தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறுகையில், “பிஎஸ்என்எல் அதன் தொழில்நுட்ப கூட்டாளியாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) உடன் 4ஜி சேவைகளை வழங்கும். இதுவே முதல்முறையாக 4ஜி சேவைகளுக்கு இந்திய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். , மேலும் அவர் கூறினார், " நாடு முழுவதும் 1 லட்சம் டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பை உட்பட பல நகரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை வழங்கும் என்றார்


நிறுவனம் தனது 4G இணைப்பை அறிவிக்கத் தயாராகி வரும் நிலையில், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களான Vodafone Idea, Airtel மற்றும் Reliance Jio ஆகியவை நாட்டில் 5G இணைப்பு சோதனைகளைத் தொடங்கியுள்ளன. பிற நிறுவனங்களின் 4ஜி தொடர்கள் பல ஆண்டுகளாக இருந்து வருவதால் பிஎஸ்என்எல்லின் 4ஜி இணைப்பு சற்று காலதாமதம் தான். இருப்பினும், இது கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.


மேலும் படிக்க | ரூ 871 மாதத்தவணையில் Redmi Note 9 Pro Max சூப்பர் ஆஃபர்! 5020mAh பேட்டரி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR