BSNL புதிய அதிரடி ப்ரீபெய்ட் திட்டங்கள்: கலக்கத்தில் Jio, Airtel, Vi
BSNL Prepaid Plans: பிஎஸ்என்எல், அதன் திட்டங்கள் மற்றும் சலுகைகள் மூலம் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi ஆகியவற்றுக்கு எப்போதும் கடுமையான போட்டியை அளிக்கிறது.
பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள்: நாட்டில் உள்ள பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாகும். பிஎஸ்என்எல், அரசு தொலைத்தொடர்பு நிறுவனமாகும். பிஎஸ்என்எல், அதன் திட்டங்கள் மற்றும் சலுகைகள் மூலம் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi ஆகியவற்றுக்கு எப்போதும் கடுமையான போட்டியை அளிக்கிறது. பிஎஸ்என்எல் சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை குறைந்த விலையில் மிகப்பெரிய நன்மைகளை அளிக்கின்றன. இந்தத் திட்டங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது
அரசாங்க தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், அதன் பயனர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு திட்டத்தின் விலை 300 ரூபாய்க்கும் குறைவாகவும் மற்றொன்று 800 ரூபாய்க்கும் குறைவாகவும் இருக்கும். இரண்டு திட்டங்களின் நன்மைகளும் ஒரே மாதிரியானவை. எனினும், இரண்டு திட்டங்களின் வேலிடிடி அதாவது செல்லுபடி காலத்தில் வேற்பாடு இருக்கும்.
மேலும் படிக்க | Loan App: இதை செய்தால் கடன் செயலிகளின் தொல்லை இருக்காது
பிஎஸ்என்எல் ரூ 269 ப்ரீபெய்ட் திட்டம்
300 ரூபாய்க்கும் குறைவான பிஎஸ்என்எல் திட்டத்தின் விலை 269 ரூபாய் ஆகும். இந்த திட்டத்தில், பயனர்களுக்கு ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்கிற்கும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும். இந்தத் திட்டத்தை வாங்கும் பயனர்களுக்கு, ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், சேலஜர் அரீனா கேம்ஸ், லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீஸ், ஹார்டி மொபைல் கேம் சர்வீஸ், லோக்துன் மற்றும் ஜிங் ஆகியவற்றுக்கான அணுகல் கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ 769 திட்டம்
பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய இரண்டாவது திட்டத்தின் விலை ரூ.769 ஆகும். ரூ.269 திட்டத்தைப் போலவே, 2ஜிபி தினசரி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு ஆகிய பலன்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் என்பதால் இதன் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சத்தமில்லாமல் ஜியோ செய்த காரியம்... 12 ரீசார்ஜ் பிளான்கள் காலி - ஐபிஎல் தான் காரணமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ