அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நேற்று ரூ.187 என்கிற கட்டணத் திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அன்லிமிடெட் டேட்டா சலுகை வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. மேலும் இந்த சலுகையை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் வழியாக தெரிவித்து வருகிறது.


பிஎஸ்என்எல் ரூ.187 என்கிற கட்டணத் திட்டத்தில் 1ஜிபி அளவிலான அதிவேக தரவை வழங்குகிறது வரம்பற்ற குரல் அழைப்புகளையும் வழங்குகிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் இதில் 1ஜிபி தரவு வேலிடிட்டி முன்னரே தீர்ந்து விட்டால், கவலைவேண்டாம், ஏனெனில் பிஎஸ்என்எல் இணைய வரம்பு தீர்ந்த பின்னர், அதன் வாடிக்கையாளர்களுக்கு 40 கேபிபிஎஸ் வேகத்திலான இணைய அணுகலை அனுமதிக்கிறது.