BSNL-ன் அதிரடியான 47 ரூபாய் recharge plan: அரண்டுபோன Airtel, Jio, Vi
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 100 ரூபாயை விட குறைவான பல திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் BSNL திட்டம் அவற்றை விட சிறந்ததாக உள்ளது.
புதுடெல்லி: வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல வகையான சலுகைகளை வழங்குகின்றன. ஆனால் அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) இந்த அனைத்து நிறுவனங்களுக்கும் நேரடி போட்டியை அளிக்கிறது. BSNL-லின் மிக மலிவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் 47 ரூபாய்க்கானதாகும். இந்த மலிவான ரீசார்ஜ் கூப்பனின் நன்மைகள் Airtel, Jio மற்றும் Vi ஆகியவற்றின் நிலையை மோசமாக்கியுள்ளன. பி.எஸ்.என் இன் மலிவான ரீசார்ஜ் திட்டம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
BSNL-ன் 47 ரூபாய் ரீசார்ஜ் திட்டம்
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 100 ரூபாயை விட குறைவான பல திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் BSNL திட்டம் அவற்றை விட சிறந்ததாக உள்ளது. இந்த சிறிய ரீசார்ஜ் கூப்பனில், எந்தவொரு நெட்வொர்க்கிலும் வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் இலவசமாக அழைப்பை மேற்கொள்ளலாம். இது தவிர, இந்த திட்டத்தில் BSNL தினமும் 100 எஸ்எம்எஸ்-ஐ பயனர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. 50 ரூபாய்க்கும் குறைவான இந்த ரீசார்ஜில் வாடிக்கையாளர்கள் தினமும் 1 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த மலிவான ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடியாகும் கால அளவு 28 நாட்கள் ஆகும்.
ALSO READ: WhatsApp மூலம் எல்பிஜி சிலிண்டர் புக் செய்வது எப்படி?
இதற்கு மாறாக, 100 ரூபாய்க்கு குறைவாக உள்ள தனியார் நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களில் இத்தனை சலுகைகள் கிடைப்பதில்லை. ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு 100 ரூபாய்க்கும் குறைவான இரண்டு திட்டங்களை வழங்குகிறது. முதலாவது 79 ரூபாய் திட்டம், இரண்டாவது 49 ரூபாய் திட்டம். இந்த இரண்டு திட்டங்களில், வாடிக்கையாளர்களுக்கு 200MB தரவு மட்டுமே கிடைக்கும்.
ஜியோ (Jio) தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ .51 மற்றும் ரூ .21 திட்டங்களையும் வழங்குகிறது. ஆனால் அவற்றின் குறைபாடு என்னவென்றால், அவை இரண்டும் டாப்-அப் திட்டங்கள். அதாவது, வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டங்களில் எந்த வேலிடிடியும் கிடைக்காது.
சந்தையில் இருக்கும் மற்றொரு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான Vodafone Idea-வின் மலிவான திட்டங்களும் BSNL-லின் 47 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்துடன் போட்டியிட முடியாது. Vi ரூ.48 மற்றும் ரூ 98 க்கு இரண்டு திட்டங்களை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டங்கள் BSNL வழங்கும் அளவுக்கு வாடிக்கையாளர்களுக்கு நன்மைகளை வழங்கவில்லை.
ALSO READ: Reliance Jio-வின் 3 அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்: Miss பண்ணிடாதீங்க, விவரம் உள்ளே
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR