Reliance Jio-வின் 3 அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்: Miss பண்ணிடாதீங்க, விவரம் உள்ளே

ரிலயன்ஸ் ஜியோ, சமீபத்தில் மூன்று வகைகளில் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி அறிவித்துள்ளது. Super Value, Best Selling மற்றும் Trending ஆகியவை இந்த திட்டங்களாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 9, 2021, 12:34 PM IST
  • ரிலயன்ஸ் ஜியோ புதிய ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி அறிவித்துள்ளது.
  • இவை மூன்று வெவ்வேறு வகைகளில் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • அனைத்து திட்டங்களும் JioTV, JioCinema, JioNews, JioSecurity மற்றும் JioCloud போன்ற Jio செயலிகளுக்கான இலவச சந்தாவை வழங்குகின்றன.
Reliance Jio-வின் 3 அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்: Miss பண்ணிடாதீங்க, விவரம் உள்ளே title=

ரிலயன்ஸ் ஜியோ, சமீபத்தில் மூன்று வகைகளில் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி அறிவித்துள்ளது. Super Value, Best Selling மற்றும் Trending ஆகியவை இந்த திட்டங்களாகும். டெலிகாம் டாக் அறிக்கையின்படி, இந்த லேபிள்கள் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே கிடைக்கக்கூடிய சில திட்டங்களை விவரிக்கின்றன. உதாரணமாக பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட திட்டம் ‘Best Selling’என்று அழைக்கப்படுகிறது.

ஜியோ அதன் 349 ரூபாய் ப்ரீபெய்ட் ரீசார்ச் திட்டத்தை "டிரெண்டிங்" திட்டமாக சேர்த்துள்ளது. அதாவது பல பயனர்கள் இந்த நேரத்தில் தங்கள் ஸ்மார்ட்போன்களை ரீசார்ஜ் செய்ய இந்த திட்டத்தை பயன்படுத்துகின்றனர் என்று இதற்கு பொருள். 199 ரூபாய் மற்றும் 555 ரூபாய் திட்டங்கள் ‘Best Sellers’ ஆக பெயரிடப்பட்டுள்ளன.

ரிலையன்ஸ் ஜியோ Best Selling Plans

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) தனது "Best Sellers" லேபிளின் கீழ் நான்கு திட்டங்களை பட்டியலிட்டுள்ளது. 199 ரூபாய் திட்டம் இவற்றில் மிகவும் மலிவான திட்டமாகும். 199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில், ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை 28 நாட்களுக்கான செல்லுபடியாகும் தன்மையுடன் கிடைக்கின்றன.  

இந்த லேபிளின் கீழ் இரண்டாவது திட்டம் 555 ரூபாய் திட்டமாகும். இது ₹ 199 திட்டத்தின் அதே நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இதன் செல்லுபடியாகும் தன்மை 84 நாட்களாகும். 599 ரூபாய்க்கும் 2,399 ரூபாய்க்கும் மேலும் இரண்டு திட்டங்கள் உள்ளன. இவை தினமும் 2GB டேட்டாவை வழங்குகின்றன. இவற்றின் செல்லுபடியாகும் தன்மை முறையே 84 நாட்கள் மற்றும் 365 நாட்களாகும்.

ALSO READ: Realme Narzo 30 Pro 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் - அதன் சிறப்பம்சம் விலை குறித்த விவரம்

ரிலையன்ஸ் ஜியோ Super Value Plans

Super Value திட்டங்களில் 249 ரூபாய் மற்றும் 2599 ரூபாய்க்கான திட்டங்கள் உள்ளன. 249 ரூபாய்க்கான திட்டத்தில் தினமும் 2GB தரவு கிடைக்கும். இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். 2599 திட்டத்தில் தினமும் 2GB உடன் கூடுதல் 10 GB தரவும் (Data) கிடைக்கும். இந்த திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் இதில் 399 ரூபாய் மதிப்பிலான இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவும் கிடைக்கிறது. இரண்டு திட்டங்களிலும் வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கின்றன.

ரிலையன்ஸ் ஜியோ Trending Plans

இந்த பிரிவில் பட்டியலிடப்பட்ட ஒரே ஒரு திட்டம் ₹ 349 ஆகும். இந்த ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plans) ஒரு நாளைக்கு 3Gb தரவு, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது மற்றும் இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த லேபிள்களின் கீழ் உள்ள அனைத்து திட்டங்களும் JioTV, JioCinema, JioNews, JioSecurity மற்றும் JioCloud போன்ற Jio செயலிகளுக்கான இலவச சந்தாவை வழங்குகின்றன.

ALSO READ: Best Postpaid திட்டங்களை வழங்கும் Jio, Airtel, Vi: 150GB தரவு, இலவச OTT App இன்னும் பல நன்மைகள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News