அசத்தும் BSNL... கலக்கத்தில் ஜியோ... 485 ரூபாயில் 123 GB டேட்டா...
பொதுத் துறை நிறுவனமான தனது மலிவான ரீசார்ஜ் திட்டங்களால் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியாளராக உருவாகி வருகிறது.
ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியாளராக பிஎஸ்என்எல் உருவாகி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்க அரசு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கியுள்ளதோடு, அதன் மேம்பாட்டிற்காக பல திட்டங்களையும் வகுத்துள்ளது. பொதுத் துறை நிறுவனமான தனது மலிவான ரீசார்ஜ் திட்டங்களால் பயனர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS.485 plan)
BSNL நிறுவனம் 82 நாட்கள் செல்லுபடியாகும் மலிவான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிஎஸ்என்எல்லின் இந்த ரீசார்ஜ் திட்டத்திற்கான கட்டணம் ரூ.485. இந்த திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற அழைப்பு வசதியுடன் தினசரி 1.5 ஜிபி டேட்டா பலனைப் பெறுவார்கள். நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 123ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பின் நன்மையும் வழங்கப்படுகிறது. அதாவது அன்லிமிடெட் லோக்கல் கால் (Unlimited Local), எஸ்டிடி கால் (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பெறலாம். இது தவிர, பயனர்கள் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியையும் பெறுவார்கள்.
மேலும் படிக்க | போன் பேசும் போது... வாய்ஸ் கிளையரா இல்லையா... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்
பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS.347 plan)
டேட்டா அதிகம் தேவை என்றால், பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் பலன் கொடுக்கும். தினமும் 2ஜிபி டேட்டா வசதியை கொடுக்கும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 108 ஜிபி டேட்டா கிடைக்கும்.
BSNL நிறுவனத்தின் Self Care செயலி
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் நிறுவனத்தின் Self Care செயலியில் பல ரீசார்ஜ் திட்டஙக்ள் பட்டியலிடப்பட்டுள்ளது. BSNL பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள BSNL Self Care செயலியை பதிவிறக்கவும். இதற்குப் பிறகு, உங்கள் மொபைல் எண் மற்றும் OTP ஐப் பயன்படுத்தி செயலியில் உள்நுழையவும். முகப்பு பக்கத்தில் பல பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான ஆப்ஷன்களை காணலாம். உங்களுக்கு ஏற்ற திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் எண்ணை ரீசார்ஜ் செய்யலாம்.
பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் சேவை
பிஎஸ்என்எல் பயனர்களுக்கு சிறந்த இணைப்பை வழங்க புதிதாக ஆயிரக்கணக்கான புதிய மொபைல் டவர்களும் நிறுவப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு முதல் பாதியில், இந்தியா முழுவதும் உள்ள பயனர்கள் பிஎஸ்என்எல் 4ஜி சேவையைப் பெறும் வகையில் நெட்வொர்க் சேவை விரிவுபடுத்தப்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது. இது மட்டுமின்றி, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன, இதன் காரணமாக பயனர்கள் அதிவிரைவு இணைப்பையும் பெறுவார்கள்.
BSNL-MTNL 5G பரிசோதனை
BSNL மற்றும் MTNL விரைவில் தங்கள் பயனர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும் வகையில், இரண்டு நிறுவனங்களுக்கும் 5ஜி சோதனையை தொடங்கியுள்ளன. தொலைத்தொடர்புத் துறை மற்றும் C-DoT ஆகியவை இந்த இரண்டு அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 5G சோதனையை நடத்தி வருகின்றன. BSNL மற்றும் MTNL இன் 5G சேவையானது மேட் இன் இந்தியா நெட்வொர்க் கருவிகள் மூலம் முழுமையாக தொடங்கப்படும்.
மேலும் படிக்க | போலீஸ் இருப்பாரு... பார்த்து போங்க ... எச்சரிக்கும் கூகுள் மேப்ஸ்... நண்பேன்டா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ