போலீஸ் இருப்பாரு... பார்த்து போங்க ... எச்சரிக்கும் கூகுள் மேப்ஸ்... நண்பேன்டா

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ் என்னும் செயலி உங்கள் பயணத்தை பாதுகாப்பாகவும் வசதியாகவும் மாற்ற கூகுள் மேப்ஸ் பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 12, 2024, 04:05 PM IST
  • போக்குவரத்து விதி மீறலை செய்து அபராதம் கட்டும் சூழ்நிலையை தவிர்க்கவும் உதவும் சில அம்சங்கள்.
  • உங்கள் பயணத்தை பாதுகாப்பாகவும் வசதியாகவும் மாற்ற கூகுள் மேப்ஸ் பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
  • போக்குவரத்து நெரிசல் நிலைமைகளைப் அறிந்து கொள்ள ட்ராஃபிக் லேயர்களை ஆன் செய்யலாம்
போலீஸ் இருப்பாரு... பார்த்து போங்க ... எச்சரிக்கும் கூகுள் மேப்ஸ்... நண்பேன்டா title=

நாம் பயணம் மேற்கொள்ளும் போது, முன்பின் தெரியாத இடத்திற்கு செல்கையில், வழித்தடம் பற்றிய தகவல்களை அறிய, அருகில் இருக்கும் கடைகள் அல்லது சாலையில் செல்லும் நபர்களிடம், எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்போம். ஆனால் அந்தக் காலம் எல்லாம் போய்விட்டது. கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். கூகுள் மேப்ஸ் உதவியுடன் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். அவ்வப்போது கூகுள் தவறான வழி காட்டுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், கூகுள் மேப்ஸ் (Google Maps), பொதுவாக சிறந்து வழிகாட்டியாகவே செயல்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் மேப் என்னும் செயலி  கூகுளால் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. உங்கள் பயணத்தை பாதுகாப்பாகவும் வசதியாகவும் மாற்ற கூகுள் மேப்ஸ் பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. இந்த அம்சங்களில் சில போக்குவரத்து விதி மீறலை தவிர்க்கவும் உதவும். 

வேக எச்சரிக்கை (Speed ​​Alert)

போக்குவர்த்து விதியில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை விட வேகமாக வாகனம் ஓட்டும்போது, கூகுள் மேப்ஸின் வேக எச்சரிக்கை அம்சம் உங்களை எச்சரிக்கும். இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்ய, Google Maps செயலியின் செட்டிங்ஸ் பிரிவுக்கு சென்று, வேக எச்சரிக்கையை ஆன்  செய்யவும்.

போக்குவரத்து சோதனைகள் குறித்த தகவல்கள்

கூகுள் மேப்ஸில் நீங்கள் செல்லும் வழியை கஸ்டமைஸ் என்னும்  தனிப்பயனாக்குவதன் மூலம், போக்குவரத்து துறை சோதனைகள் மேற்கொள்ளும் பகுதிகள் குறித்த தகவலையும் கொடுக்கும். இதனால், அபராதம் விதிக்கப்படும் அபாயம் அதிக உள்ள சாலைகளைத் தவிர்க்கலாம். வழியைக் கண்டறிந்த பிறகு, பாதை ஆப்ஷனை  கிளிக் செய்வதன் மூலம் உங்கள் வழியைத் கஸ்டமைஸ் செய்யலாம்.

மேலும் படிக்க | GNSS சுங்கக் கட்டணம் எப்போது அமலுக்கு வரும்? FASTagஐ விட சிறந்த கட்டண முறையா இது?

போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்  (Traffic Update)

கூகுள் மேப்ஸின் இந்த அம்சம் நிகழ்நேரத்தில் போக்குவரத்து  நெரிசல் நிலைமையைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறது. இதனால் நீங்கள் நெரிசலைத் தவிர்த்து உங்கள் இலக்கை விரைவாக அடையலாம்.  கூகுள் மேப்ஸ் செயலியில், போக வேண்டிய இடத்திற்கான  வழியைக் கண்டறிந்த பிறகு, ட்ராஃபிக் நிலைமைகளைப் பார்க்க ட்ராஃபிக் லேயர்களை ஆன் செய்யலாம்

குரல் மூலம் வழி குறித்த தகவல் (Voice navigation)

குரல் வழிசெலுத்தல் அம்சம் மூலம், போனை பார்த்து வழியை அறிந்து கொள்வதை தவிர்த்து உங்கள் கண்களை சாலையில் வைத்து கவனம் செலுத்த உதவுகிறது. இதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.  கூகுள் மேப்ஸ் செட்டிங்க்ஸ் பிரிவுக்கு சென்று இதை  ஆன் செய்யலாம்.

குறுகிய சாலைகள் குறித்த அலர்ட்

பயணம் செய்யும் போது மிகவும் குறுகலான சாலைகள் வந்தால், அது குறித்த எச்சரிக்கையை கூகுள் உடனே வழங்கும். செயற்கைக்கோள் படங்கள், ஸ்ட்ரீட் வியூ மற்றும் பிற தொழில்நுட்ப தரவுகளை பயன்படுத்தி, சாலையின் அகலத்தை மதிப்பிட்டு, அதற்கேற்ற வகையில் வாகனங்களுக்கு வழிகாட்டும் அம்சம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நான்கு சக்கர வாகனத்தை பயன்படுத்துபவர்கள் வேறு வழியை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும். 

மேலும் படிக்க | அட்டகாசமான ஸ்டைலுடன் குறைவான விலையில் எம்ஜி விண்ட்ஸ்டர் கார்! பேட்டரிக்கு வாடகை ஏன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News