Lava Blaze 2 5G Launch Date: Lava நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள அடுத்த மொபைல் குறித்து பல்வேறு தகவல்கள் அதிகாரப்பூர்வமற்ற வகையில் கசிந்தன. இரண்டு முறை அந்த மொபைல் குறித்த தகவல்கள் கசிந்ததை தொடரந்து Lava நிறுவனம் அதன் Blaze 2 5G மொபைல அறிமுகப்படுத்தும் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Lava நிறுவனம் அந்த மொபைலின் பெயரில் குறிப்பிட்டது போன்று, இந்த ஸ்மார்ட்போன் 5G சாதனமாக இருக்கும் என்பதை உறுதியாகிறது. மேலும் இது பட்ஜெட் விலையில் கிடைக்கும் மொபைல்களின் பிரிவில் வரும். இதன் முந்தைய மாடலான Blaze 5G வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே, அதே மாடலில் புதிய ஹார்ட்வேர் உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், Lava Blaze 2 5G மொபலை அறிமுகப்படுத்தும் தேதி மற்றும் அதன் பிற விவரங்களை இங்கு காணலாம். 


எப்போது அறிமுகம்?


Lava Blaze 2 5G மொபைல் வரும் நவம்பர் 2ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து அந்நிறுவனம் யூ-ட்யூப்பில் வெளியாகி உள்ளது. அதன் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் சேனலிலேயே இந்த மொபைலின் வெளியீடு நேரடியாக ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்டதும், ஸ்மார்ட்போன் அதன் விற்பனை பார்ட்னர்கள் மூலம் ஆன்லைனில் விற்பனையை தொடங்கும். இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கிடைக்கும்.


மேலும் படிக்க | இந்த டெக்னாலஜியில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன்..! ஏஐ - கேமிங் எல்லாம் இருக்கிறது


மிரட்டும் கேமரா 


Lava நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய விளம்பர வீடியோவில் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை அது வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் இரண்டு கேமராக்களைக் கொண்ட ஒரு வட்ட கேமரா அமைப்பை கொண்டுள்ளது. கேமரா லென்ஸ்கள் எல்இடி ஃபிளாஷ் யூனிட் மூலம் உதவியாக இருக்கும். பின்புற கேமரா அமைப்பு செயற்கை நுண்ணறிவு மூலம் ஆதரிக்கப்படும் என தெரிகிறது.


வீடியோ:



முக்கிய அம்சங்கள்


இது தவிர, இந்த மொபைல் மூன்று வண்ணங்களில் கிடைக்கும் என்பதையும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கருப்பு, நீலம் மற்றும் ஊதா உள்ளிட்ட மூன்று வண்ணங்களில் இந்த மொபைல் கிடைக்கும். முன்னதாக, இந்த மொபைலின் வடிவமைப்பு படங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட்போன் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவுடன் வரும். இது எல்சிடி பேனலாக இருக்கும் மற்றும் அதிக புதுப்பிப்பு வீத (Refresh Rate) ஆதரவைக் கொண்டிருக்கலாம்.


ஸ்டோரேஜ் வசதிகள்


இது 4GB/6GB RAM மற்றும் 64GB/128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் பிராஸஸர் மூலம் இயக்கப்படும். இந்த மொபைல் UFS 2.2 சேமிப்பக வகையைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கூடுதல் சேமிப்பக தேவைகளுக்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் (Memory Card Slot)வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பின்புறத்தில் உள்ள இரண்டு கேமராக்களில், ஃபோனின் பிரதான லென்ஸ் 50MP சென்சாராக இருக்கும். கேமரா பல அம்சங்கள் மற்றும் பயன்முறைகளுடன் வரலாம். இந்த ஸ்மார்ட்போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும் பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சார்ஜிங் மற்றும் டேட்டா பரிமாற்றத்திற்கு கீழே USB-C போர்ட் இருக்கும். வயர்டு ஹெட்ஃபோன்களை இணைக்க 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதனம் ஆண்ட்ராய்டு 13 OS மூலம் இயக்கப்படலாம்.


விலை...?


இந்த மொபைலின் விலையைப் பொறுத்தவரை, ரூ. 10 ஆயிரத்திற்குள் வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடிப்படை வேரியண்ட் ரூ.9,000 மற்றும் டாப் வேரியண்ட்டுக்கு ரூ.10,000 முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | அம்சமான ஆப்பர்... ரூ. 6,500 தள்ளுபடி - அமேசானின் அதிரடி விற்பனையில் OnePlus மொபைல்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ