புதுசு கண்ணா புதுசு... பட்ஜெட் விலையில் பட்டையை கிளப்பும் இந்த ஸ்மார்ட்போன் - A to Z இதோ!

Lava Blaze Pro 5G: பல்வேறு சிறப்பான அம்சங்களுடனும் நல்ல பட்ஜெட் விலையிலும் Lava நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 26, 2023, 06:38 PM IST
  • இது மற்ற நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியாக இருக்கும்
  • இது 5G ஸ்மார்ட்போன் ஆகும்.
  • இதே நிறுவனம் 4G மொபைல் ஒன்றையும் இந்த மாதம் அறிமுகப்படுத்தியது.
புதுசு கண்ணா புதுசு... பட்ஜெட் விலையில் பட்டையை கிளப்பும் இந்த ஸ்மார்ட்போன் - A to Z இதோ! title=

Lava Blaze Pro 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் இன்று செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைலின் முந்தை மாடலில் இருந்து அதன் பின் பேனல் நிறம் இதில் மாற்றப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு மற்ற Lava தயாரிப்பின் போன்களைப் போலவே உள்ளது. 

மீடியா டெக்கின் அதிவேக செயலியானது கைபேசியில் சீராக இயங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது. இது 120Hz Refresh Rate-ஐ கொண்டுள்ளது. இது தவிர இந்த 5G மொபைலில் 128 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் அதன் பட்ஜெட் பிரிவில் உள்ள Xiaomi, Samsung, Vivo மற்றும் Oppo போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு வலுவான போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Lava Blaze Pro 5G மொபைலின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விலை குறித்து இதில் காணலாம். 

Lava Blaze Pro 5G - விவரக் குறிப்புகள்

6.78 இன்ச் டிப்ளே கொண்ட இந்த மொபைல், Mediatek Dimensity 6020 செயலியுடன் வந்துள்ளது. 8 GB RAM, 128 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற மெமரியுடன் 5000mAh பேட்டரியுடன் வந்துள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 வெர்ஷனாகும்.

மேலும் படிக்க | ஆப்பிள் வாட்சுடன் போட்டிப் போடும் அசத்தல் ஸ்மார்ட்வார்ச்... விலையோ ரூ. 2 ஆயிரம் தான்!

Lava Blaze Pro 5G - கேமரா 

Lava Blaze Pro 5G ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது, அதன் புதுப்பிப்பு விகிதம் 120Hz ஆகும். இதில், பயனர்கள் சிறந்த படத் தரத்தைப் பெறுவார்கள். புகைப்படம் எடுப்பதற்காக, சாதனம் 50MP இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இது EIS உடன் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 8MP கேமரா செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு கிடைக்கிறது.

Lava Blaze Pro 5G - ஆண்ட்ராய்டு வெர்ஷன்

இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான இயங்குதளத்தில் இயங்குகிறது. இது MediaTek Dimensity 6020 செயலி மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8GB RAM, 16GB வரை அதனை நீட்டித்துக் கொள்ளலாம்.

Lava Blaze Pro 5G - பேட்டரி மற்றும் இணைப்பு

இந்த  போனில் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை 33W ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யலாம். இது தவிர, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், ஹெட்போன் ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற வசதிகளுடன் போனில் இணைக்கப்பட்டுள்ளது.

Lava Blaze Pro 5G - விலை

Lava Blaze Pro 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் முதல் விற்பனை அக்டோபர் 3ஆம் தேதி முதல் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஷாப்பிங் தளமான அமேசான் இந்தியாவில் தொடங்க உள்ளது.

Lava Blaze 2 Pro 4G - விவரங்கள்

ஸ்மார்ட்போன் பிராண்டான Lava இந்த மாத தொடக்கத்தில் லாவா பிளேஸ் 2 Pro 4G மொபைலை அறிமுகப்படுத்தியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த போனின் விலை ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாகவே வைக்கப்பட்டுள்ளது. இந்த 4G போனில் LCD டிஸ்ப்ளே மற்றும் UNISOC T616 சிப்செட் உள்ளது. மேலும், மொபைலில் Mali G57 GPU வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனம் ஆண்ட்ராய்டு 13இல் வேலை செய்கிறது. இந்த மொபைலில் 50MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது, அதே சமயம் 8MP கேமரா முன்பக்கத்தில் கிடைக்கிறது. ஆற்றலுக்கு, கைபேசியில் 5000mAh பேட்டரி உள்ளது.

மேலும் படிக்க | இனி அலையவே வேண்டாம்... ரயிலில் காலி சீட் இருப்பதை எளிமையாக தெரிஞ்சிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News