Flipkart Summer Sale: மாஸான போன்களை லேசான விலையில் வாங்கலாம்!!
Flipkart Summer Saver Days: வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களில் கிடைக்கும் தள்ளுபடியைத் தவிர, கூடுதல் தள்ளுபடியையும் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், சம்மர் சேவிங் டேஸ் சேல் விற்பனைக்காக பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியுடன் கைகோர்த்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்
ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி உள்ளது. ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், பிளிப்கார்ட் சம்மர் சேவர் டேஸ் சேல் (Flipkart Summer Saver Days Sale) தொடங்கியுள்ளது. இந்த பிளிப்கார்ட் சேல் ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 17 வரை லைவாக இருக்கும். இந்த விற்பனையின் போது, ஐபோன் 13 (iPhone 13), பிக்சல் 6ஏ (Pixel 6A) மற்றும் கூகிள் பிக்சல் 7 ப்ரோ (Google Pixel 7 Pro) உள்ளிட்ட பல கைபேசிகளுக்கு பம்பர் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
Flipkart Sale 2023: கூடுதல் தள்ளுபடியைப் பெறுவது எப்படி?
வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களில் கிடைக்கும் தள்ளுபடியைத் தவிர, கூடுதல் தள்ளுபடியையும் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், சம்மர் சேவிங் டேஸ் சேல் விற்பனைக்காக பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியுடன் கைகோர்த்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது, விற்பனையின் போது ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு அல்லது EMI பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தினால், 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Google Pixel 6A: இந்தியாவில் இதன் விலை என்ன?
கூகுளின் இந்த பிக்சல் ஸ்மார்ட்போன் 43 ஆயிரத்து 999 ரூபாய்க்கு அறிமுகம் ஆனது. இந்த விலை போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாறுபாட்டுக்கானது. இந்த சாதனம் பிளிப்கார்ட் விற்பனையில் 28,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது, இந்த போன் அறிமுக விலையை விட15 ஆயிரம் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | பொது இடங்களில் சார்ஜ் செய்யாதீங்க மக்களே..! அமெரிக்காவின் FBI எச்சரிக்கை
இந்தியாவில் ஐபோன் 13 விலை
ஆப்பிள் பிராண்டின் இந்த ஐபோன் மாடலின் 128 ஜிபி சேமிப்பு மாறுபாடு ரூ. 79 ஆயிரத்து 900 க்கு அறிமுகம் ஆனது. ஆனால் இப்போது விற்பனையின் போது இந்த ஸ்மார்ட்போன் தள்ளுபடிக்குப் பிறகு ரூ. 58 ஆயிரத்து 999 க்கு விற்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்க. இந்த போன் ஆப்பிள் ஆன்லைன் தளத்தில் ரூ.69,900க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கூகுள் பிக்சல் 7 ப்ரோ விலை
12 ஜிபி ரேம் கொண்ட இந்த சக்திவாய்ந்த ஃபீச்சர் போனின் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டை கூகுள் இந்திய சந்தையில் ரூ.84 ஆயிரத்து 999க்கு அறிமுகப்படுத்தியது. ஆனால் இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் அதே மாடல் ரூ.79 ஆயிரத்து 999க்கு கிடைக்கும். அதாவது இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் ரூ.5000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ