FBI Warning: பொது இடங்களில் சார்ஜ் செய்யாதீங்க மக்களே..! அமெரிக்காவின் FBI எச்சரிக்கை

பொது இடங்களில் இருக்கும் யுஎஸ்பியில் சார்ஜ் செய்ய வேண்டாம் என எப்பிஐ அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளது. மொபைல்கள் ஹேக்கிங் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 15, 2023, 11:31 AM IST
  • பொது இடங்களில் சார்ஜ் செய்வது ஆபத்து
  • ஹேக்கர்கள் வைத்திருக்கும் பொறி
  • சிக்கிக் கொள்ளாதீர்கள் என எச்சரிக்கும் FBI
FBI Warning: பொது இடங்களில் சார்ஜ் செய்யாதீங்க மக்களே..! அமெரிக்காவின் FBI எச்சரிக்கை title=

ஹேக்கிங்

உலகம் முழுவதும் மொபைல் மற்றும் ஆன்லைன் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துள்ளதால் வீட்டுக்கு சென்று திருடாமல் இணையவழியிலேயே விஞ்சான வழியில் திருடுவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு பெயர் ஹேக்கிங். படித்த, இணையம் மற்றும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களால் அரங்கேற்றப்படும் இத்தகைய திருட்டில் குற்றவாளிகளை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அவர்களால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் முதல் வங்கிக் கணக்கு வரை என அனைத்தையும் கொள்ளையடிக்க முடியும். உங்களுக்கு தெரியாமலேயே இதனை அரங்கேற்றுவது தான் ஹேக்கிங்கில் இருக்கும் சிறப்பு. 

மேலும் படிக்க | Amazon Blockbuster Value Days 2023: இன்று முதல்... எந்த பொருட்களுக்கு எவ்வளவு தள்ளுபடி - முழு விவரம்

தகவல் திருட்டு

உங்கள் மொபைலிலேயே தனிப்பட்ட தகவல்கள் முதல் வங்கிக் கணக்கு விவரங்கள் வரை அனைத்தும் இருக்கும். அல்லது ஒரு மெயில் ஐடி, பாஸ்வேர்டு என எது கிடைத்தாலும் அதனை வைத்து அடுத்தடுத்து அவர்களின் சித்துவிளையாட்டை ஹேக்கர்களால் அரங்கேற்ற முடியும். சரி, ஹேக்கர்கள் எப்படி மொபைலுக்குள் நுழைகிறார்கள் என்ற கேள்வி பொதுவான கேள்வி இருக்கிறது.

உங்கள் மொபைலுக்கு வரும் லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம், தேவையற்ற செயலிகளை பதிவிறக்குவதன் மூலம், மொபைலுக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்கும்போது, பொது இடங்களில் சார்ஜ் செய்யும்போது என பல்வேறு வழிகளில் ஹேக்கர்களால் உங்கள் மொபைலுக்குள் நுழைய முடியும். அனைத்து கோணங்களிலும் கவனமாக இருந்தால் மட்டுமே உங்களால் ஹேக்கிங்கில் இருந்து தப்பிக்க  முடியும்.

FBI எச்சரிக்கை

இதன் ஒரு பகுதியாக எப்பிஐ அமெரிக்கர்களுக்கு பொது இடங்களில் இருக்கும் சார்ஜ் போர்ட்டல்களில் சார்ஜ் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு பிரபலமாக இருந்த ஜூஸ் ஹேக்கிங் எனப்படும் பொது இடங்களில் இருக்கும் யுஎஸ்பி போர்ட்ல்கள் மூலம் மொபைல்கள் ஹேக்கிங் செய்யப்படுவது மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள் பொருத்தியிருக்கும் போர்ட்டல்கள் வழியாக நீங்கள் சார்ஜ் செய்யும்போது, உங்களுக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமலேயே உங்கள் மொபைலில் இருக்கும் அனைத்து தகவல்களையும் அவர்களால் திருடிக் கொள்ள முடியும். 

இந்த ஹேக்கிங் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியிருப்பதால் உஷாராக இருக்குமாறு எப்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக ஏர்போர்ட்டுகளில் சார்ஜ் செய்யும்போது கவனம் தேவை என அறிவுறுத்தியிருக்கிறது. இந்தியாவிலும் ரயில் நிலையங்கள் மற்றும் ஏர்போர்ட்டுகளில் சார்ஜிங் வசதி உள்ளது. மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் பொது சார்ஜிங் வசதிகள் நிறுவப்பட்டிருக்கின்றன. அங்கு சார்ஜிங் செய்யும்போது கவனமாக முன்னெச்சரிக்கை செய்து கொள்வது அவசியம்.

மேலும் படிக்க | Maruti Suzuki Baleno: இந்த கருக்குதாங்க சந்தையில் செம டிமாண்ட், காரணம் இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News