Honda கார் வாங்க திட்டமா? இந்த மாதம் அனைத்து கார்களிலும் கிடைக்கும் அதிரடி தள்ளுபடி
Honda Car Offers: ஹோண்டா வாகன தயாரிப்பு நிறுவனம் பிப்ரவரி 2022 இல் அதன் அனைத்து கார்களுக்கும் பல வித சலுகைகளை அறிவித்துள்ளது.
Honda Car Offers: ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா பிப்ரவரி 2022 இல் அதன் அனைத்து கார்களுக்கும் பல வித சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் காரின் மாறுபாடு, தரம் மற்றும் இடத்தைப் பொறுத்து மாறுபடக்கூடும். வாடிக்கையாளர்கள் 28 பிப்ரவரி 2022 வரை அல்லது கையிருப்பு இருக்கும் வரை, நிறுவனத்தின் இந்த நன்மைகள் அனைத்தையும் பெற முடியும்.
நீங்களும் ஹோண்டா காரை (Honda Cars) வாங்கத் திட்டமிட்டிருந்தால், இதுதான் அதற்கு சரியான நேரம். இந்த மாதம் ஹோண்டா கார்களை வாங்கினால், பல நன்மைகளைப் பெறலாம். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான வகைகளுக்கு கிடைக்கும் சிறந்த தள்ளுபடிகள் பற்றி தெரிந்துகொள்ள அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளலாம்.
ஹோண்டா சிட்டி (ஃபிஃப்த் ஜெனரேஷன்)
ஹோண்டா சிட்டியின் அனைத்து வகைகளிலும் ரூ.35,596 வரையிலான சலுகைகளை நிறுவனம் வழங்கியுள்ளது. இதில் ரூ. 10,000 ரொக்கத் தள்ளுபடி அல்லது ரூ. 10,596-க்கான FOC ஆக்சஸரீஸ் மற்றும் கார் எக்ஸ்சேஞ்சில் ரூ. 5,000 மதிப்பிலான பலன் ஆகியவை அடங்கும். இது தவிர, வாடிக்கையாளர்கள் ரூ.5,000 லாயல்டி போனஸையும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.7,000 வரை தள்ளுபடியையும் பெறலாம். ஹோண்டா நிறுவனம் ரூ.8,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடியையும் வழங்குகிறது.
ஹோண்டா ஜாஸ்
ஹோண்டா கார்ஸ் இந்தியா ஜாஸ் ஹேட்ச்பேக்கில் ரூ.33,158 வரை மொத்த நன்மைகளை வழங்கியுள்ளது. இதில் ரூ.10,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.12,158 வரை FOC ஆக்சஸெரீஸ், கார் எக்ஸ்சேஞ்சில் ரூ.5,000-க்கான நன்மை, ரூ.7,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 வரையிலான லாயல்டி போனஸ் ஆகியவை அடங்கும். கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் 4,000 ரூபாய்க்கான நன்மையை கொடுத்துள்ளது.
ALSO READ | Honda SUV: முன்னணி கார்களுக்கு போட்டியாக சந்தையில் களம் இறங்கும் புதிய ஹோண்டா கார்
ஹோண்டா WR-V
பிப்ரவரி 2022 இல் ஹோண்டா கார்ஸ் இந்தியா ஹோண்டா WR-V (Honda WR-V) எஸ்யூவியில் ரூ. 26,000 வரையிலான மொத்த பலனை வழங்குகிறது. இந்த நன்மைகளில் கார் பரிமாற்றத்தில் ரூ.10,000 வரையிலான நன்மைகள் மற்றும் ரூ.4,000 வரையிலான கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். தற்போதுள்ள ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு புதிய கார் வாங்கும் போது ரூ. 5,000 லாயல்டி போனஸுடன் ரூ.7,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும்.
ஹோண்டா சிட்டி (4வது ஜெனரேஷன்)
ஹோண்டா சிட்டியின் (Honda City) நான்காவது ஜெனரேஷனில், நிறுவனம் ரூ.20,000 வரையிலான தள்ளுபடியை வழங்கியுள்ளது. இதில், தற்போதுள்ள ஹோண்டா கார் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 லாயல்டி போனஸ் மற்றும் ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்சில் ரூ.7,000 பலன் ஆகியவை கிடைக்கும். கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனம் செடான் மீது ரூ.8,000 வரை தள்ளுபடி வழங்கியுள்ளது.
ஹோண்டா அமேஸ்
மற்ற ஹோண்டா கார்களைப் போலவே, அமேஸுக்கும் பிப்ரவரி 2022க்கான தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. செடானில் நிறுவனம் ரூ.15,000 வரை மொத்த பலனை (Car Discount) வழங்கியுள்ளது. இது அனைத்து வகைகளிலும் கிடைக்கிறது. இந்த காருக்கு ரூ.4,000-க்கான கார்பரேட் தள்ளுபடியும் உள்ளது. இது தவிர, தற்போதுள்ள ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 லாயல்டி போனஸ் மற்றும் ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்சில் ரூ.6,000 வரை போனஸ் ஆகியவையும் கிடைக்கும்.
ALSO READ | Second Hand Cars! மலிவு விலையில் செகண்ட் ஹாண்ட் கார்! ஹோண்டாவின் சூப்பர் ஆஃபர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR