விற்பனையில் சரித்திரம் படைத்த ஐபோனை வெறும் ரூ. 9,140-க்கு வாங்குவது எப்படி?
Flipkart Sale Apple iPhone: பிரபலமான ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், 34,760 ரூபாய் தள்ளுபடிக்குப் பிறகு, Apple iPhone 11 தற்போது வெறும் 9,140 ரூபாய்க்கு கிடைக்கிறது
Flipkart Sale Apple iPhone: ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்கள் மற்றுன் ஐபோன் பிரியர்களுக்கு ஒரு சூபர் செய்தி உள்ளது. ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் விற்பனையில் (Apple iPhone 11 ) ஸ்மார்ட்போனுக்கு பெரும் தள்ளுபடி கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 11 இந்தியாவில் 2019 இல் ரூ. 64,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் 2020 ஆம் ஆண்டில் உலகளவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போனாக இருந்தது. மேலும் இது மிகவும் பிரபலமான ஐபோன் மாடல்களில் ஒன்றாகும்.
ஆப்பிள் ஐபோன் 11 உற்பத்தி தற்போது நிறுத்தப்பட்டுள்ளதி. இருப்பினும், இந்த மொபைல் போன் இன்னும் பல இணையவழி தளங்களில் வாங்குவதற்கு கிடைக்கிறது. மிக பிரபலமான ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், 34,760 ரூபாய் தள்ளுபடிக்குப் பிறகு, Apple iPhone 11 தற்போது வெறும் 9,140 ரூபாய்க்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிளிப்கார்ட்டில் ரூ.2,701 குறைக்கப்பட்ட பிறகு ஆப்பிள் ஐபோன் 11 விலை ரூ.41,199 ஆக குறைந்துள்ளது. மேலும், இந்த ஐபோனை வாங்கும் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால், 5% கேஷ்பேக்கைப் பெறலாம். இத்ன் மூலம் இந்த மொபைல் போனின் விலை ரூ.39,140 ஆகக் குறைக்கப்படுகிறது. கூடுதலாக, பிளிப்கார்ட், உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக ரூ.30,000 வரை தள்ளுபடியும் வழங்குகிறது. அதாவது இந்த விற்பனையில் ஒரு மிகப்பெரிய எக்ஸ்சேஞ் ஆஃபர் அதாவது பரிமாற்ற சலுகையும் கிடைக்கிறது.
மேலும் படிக்க | Chat GPT: AI செயலிகள் மூலம் அரங்கேற்றப்படும் மோசடிகள்..! மக்களே உஷார்!
வாடிக்கையாளர்கள் இந்த பல்வேறு சலுகைகளுக்கு பிறகு ஆப்பிள் ஐபோன் 11 ஐ பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.9,140 -க்கு வாங்கலாம். ஆப்பிள் ஐபோன் 11 மிகவும் பிரபலமான ஐபோன் மாடல்களில் ஒன்றாகும். மேலும் இது ஆப்பிள் ஐபோன் 14 தொடரின் வெளியீட்டிற்குப் பிறகு நிறுத்தப்பட்டது.
Apple iPhone 11: இதன் அம்சங்கள் பற்றிய விவரம் இதோ
Apple iPhone 11, 6.1-inch Liquid Retina HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் இது A13 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது தற்போது சந்தையில் கிடைக்கும் மிகவும் மலிவான ஐபோன்களில் ஒன்றாகும். மேலும் இது 2020 ஆம் ஆண்டில் உலகளவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் ஆகும். கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் இரட்டை 12MP சென்சார்களையும் முன்பக்கத்தில் 12MP செல்ஃபி ஷூட்டரையும் கொண்டுள்ளது.
இதற்கிடையில் சமீபத்தில் பிளிப்கார்ட் பற்றிய ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. பிளிப்கார்ட் நிறுவனம் அண்மையில் கோடைகால சிறப்பு தள்ளுபடி விற்பனையை நடத்தியது. ‘Big Savings days’ விற்பனையில் எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு கூடுதல் தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அந்த தள்ளுபடிகளுக்கு வசூலிக்கப்பட்ட விற்பனைக் கட்டணம் வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ரூ.10 முதல் வசூலிக்கப்பட்ட அந்த கட்டணம் பேக்கேஜிங் கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டது. இது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் தந்திரம் என குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இதற்கு பிளிக்பார்ட் பதிலளித்துள்ளது.
‘கோடை சிறப்பு தள்ளுபடி விற்பனைக் காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட பொருட்களை நீங்கள் வாங்கும் போதெல்லாம், உங்களின் மொத்த பில்லில் ரூ.10 பெயரளவு கட்டணம் சேர்க்கப்பட்டிருந்தது. ஒரு முறை விற்பனைக் கட்டணமான ரூ. 10 உடன் நீங்கள் சிறந்த டீல்களை அனுபவிக்கலாம். எத்தனை பொருட்கள் வாங்கினாலும், ஆர்டர் செய்தாலும் ஒரு முறை மட்டும் இந்த கட்டணம் வசூலிக்கப்படும்.’ என்று பிளிப்கார்ட் கூறியுள்ளது.
மேலும் படிக்க | ஜியோவை ஓரங்கட்டிய ஏர்டெல்: எதில் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ