iPhone 13: விலையை கேட்டா நம்ப மாட்டீங்க, பிளிப்கார்ட்டில் அதிரடி, முந்துங்கள்

Flipkart Big Saving Days:இந்த விற்பனையில், பல மின்னணு சாதனங்களுக்கு பெரும் தள்ளுபடிகள் அளிக்கப்படுகின்றன. செல்போனில் ஐபோன்களில் அற்புதமான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 10, 2023, 12:53 PM IST
  • ஐபோன் 13 இன் அறிமுக விலை ரூ.69,900 ஆகும்.
  • ஆனால் பிளிப்கார்ட்டில் இந்த போன் ரூ.58,999 -க்கு கிடைக்கிறது.
  • அதாவது, பிளிப்கார்ட்டில் இந்த போனில் முழுமையாக 15% தள்ளுபடி கிடைக்கிறது.
iPhone 13: விலையை கேட்டா நம்ப மாட்டீங்க, பிளிப்கார்ட்டில் அதிரடி, முந்துங்கள் title=

Flipkart Big Saving Days: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் (Flipkart Big Saving Days Sale) விற்பனை நடந்து வருகிறது. இந்த விற்பனை மே 4 ஆம் தேதி தொடங்கி இன்று அதாவது மே 10 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த விற்பனையில், பல மின்னணு சாதனங்களுக்கு பெரும் தள்ளுபடிகள் அளிக்கப்படுகின்றன. செல்போனில் ஐபோன்களில் அற்புதமான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. 

ஆப்பிள் ஐபோன் 13: சலுகைகள் 

ஆப்பிள் ஐபோன் 13 மிகவும் பிரபலமான மாடல் ஆகும். இந்த போனை வாங்க உங்களுக்கும் ஆர்வம் இருந்தால், இந்த விற்பனை அதற்கான சரியான நேரமாக இருக்கும்.  ஐபோனின் மிக அதிக விலை காரணமாக இதை வாங்க தயக்கம் காட்டும் அனைவருக்கும் இந்த விற்பனையால் பலன் கிடைக்கும். இந்த சேலில் ஐபோன் 13 ஸ்மார்ட்போனை 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். இவ்வளவு குறைந்த விலையில் இந்த ஐபோன் 13-ஐ எப்படி வாங்குவது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Flipkart Big Saving Days: iPhone 13 சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

ஐபோன் 13 இன் அறிமுக விலை ரூ.69,900 ஆகும். ஆனால் பிளிப்கார்ட்டில் இந்த போன் ரூ.58,999 -க்கு கிடைக்கிறது. அதாவது, பிளிப்கார்ட்டில் இந்த போனில் முழுமையாக 15% தள்ளுபடி கிடைக்கிறது. அதைத் தவிர பல வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் இதில் கிடைக்கின்றன. இதன் காரணமாக தொலைபேசியின் விலை கணிசமாகக் குறைக்கப்படும்.

மேலும் படிக்க | ChatGPT: ’சொன்னது நடந்துடுச்சு’ பொய் செய்திகளுக்கு வித்திடும் ஏஐ - இதோ உதாரணம் 

Flipkart Big Saving Days: iPhone 13 வங்கி சலுகை

இந்த பிளிப்கார்ட் விற்பனையில் ஐபோன் 13 வாங்க எஸ்பிஐ கார்டைப் பயன்படுத்தினால், ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு போனின் விலை ரூ.57,749 ஆக குறையும். இதைத் தவிர இதில் ஒரு பரிமாற்ற சலுகையும் அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இதனால் இதன் விலை இன்னும் கணிசமாகக் குறையும். 

Flipkart Big Saving Days: iPhone 13 எக்ஸ்சேஞ்ச் சலுகை

ஐபோன் 13 இல் 28 ஆயிரம் ரூபாய்க்கான மிகப் பெரிய எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை பரிமாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியை பெறலாம். எனினும், எக்ஸ்சேஞ் ஆஃபரின் சலுகையை பெற, தங்கள் ஸ்மார்ட்போன் லேட்டஸ்ட் மாடலாக இருப்பதையும் நல்ல நிலையில் இருப்பதையும் வாடிக்கையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் ரூ. 28,000 -க்கான இந்த எக்ஸ்சேஞ்ச் போனசை அவர்கள் பெற முடியும். 

இந்த அனைத்து சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெற்றால், ஐபோன் 13 -ஐ நம்பமுடியாத விலையில் வாங்கிச் செல்லலாம். 

ஐபோன் 13 தவிர, இந்த விற்பனையில் Samsung S21 FE 5G ஸ்மார்ட்போனிலும் மிகப்பெரிய சலுகை அளிக்கப்படுகின்றது.

Samsung S21 FE 5G: பிளிப்கார்ட் டீல் 

பிளிப்கார்ட்டின் இந்த சேலில், வாடிக்கையாளர்கள் சாம்சங் எஸ்21 எஃப்இ 5ஜி (Samsung S21 FE 5G) ஸ்மார்ட்போனை முன் எப்போதும் இல்லாத மிகக்குறைந்த விலையில் வாங்கலாம். இந்த பிரீமியம் சாம்சங் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.74,999. ஆனால் இந்த விற்பனையின் மூலம் 26 சதவீத தள்ளுபடியுடன் ரூ.54,999 -க்கு பிளிப்கார்ட்டில் இதை வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை இதுவரை இல்லாத குறைந்த விலையில் வாங்கலாம். 

இது மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்போது பல வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் அதாவது பரிமாற்ற சலுகைகளின் பலனும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது. 

மேலும் படிக்க | ChatGPT: ’சொன்னது நடந்துடுச்சு’ பொய் செய்திகளுக்கு வித்திடும் ஏஐ - இதோ உதாரணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News