அமேசானில் Fab Phones Fest விற்பனை தொடங்கியுள்ளது. விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆஃபரில் Samsung Galaxy M12 ஸ்மார்ட்போனை 500 ரூபாய்க்கும் குறைவாக வாங்கலாம். ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 14 வரை Fab Phones Fest நடைபெறுகிறது. இந்த விற்பனையில், சாம்சங்கைப்போல் மற்ற மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களையும் குறைந்த விலைக்கு வாங்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Taflon coating: காரில் டெஃப்ளான் கோட்டிங் உண்மையில் நன்மை பயக்குமா


Samsung Galaxy M12 சலுகைகள் 


Samsung Galaxy M12 4GB RAM + 64GB ஸ்ரோஜ் கொண்டது. இந்த வேரியண்டின் தொடக்க விலை 12,999 ரூபாய். ஆனால் இந்த தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையில் 9,499 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதாவது 3,500 ரூபாய் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போனுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. அதுவும் கிடைத்தால் மேலும் குறைந்தவிலையில் ஸ்மார்ட்போனை வாங்கலாம். 


எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்


Samsung Galaxy M12 ஸ்மார்ட்போனுக்கு 9 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இவ்வளவு தள்ளுபடி பெறலாம். ஆனால் உங்கள் பழைய போன் நல்ல நிலையில் இருந்து, லேட்டஸ்ட் மாடலாக இருந்தால் மட்டுமே 9 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். இல்லையென்றால், அதன் தன்மைக்கு ஏற்ப உங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கும். முழுமையான எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைத்தால், வெறும் 499 ரூபாய்க்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.


மேலும் படிக்க | பட்ஜெட் விலையில் அடுத்த வாரம் இந்தியாவில் இந்த சிறந்த கார்கள் அறிமுகம்


No Cost EMI-ல் வாங்கலாம்


Samsung Galaxy M12 ஸ்மார்ட்போனை No Cost EMI -ல் வாங்கலாம். நோ காஸ்ட் இஎம்ஐ என்றால் நீங்கள் போனுக்கு எந்த வட்டியும் செலுத்த வேண்டியதில்லை. எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு மூலம் இஎம்ஐயில் போனை வாங்கினால், 24 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.452 செலுத்த வேண்டும். புரோசசெஸிங் கட்டணம் 199 ரூபாய் செலுத்த வேண்டும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR