பட்ஜெட் விலையில் அடுத்த வாரம் இந்தியாவில் இந்த சிறந்த கார்கள் அறிமுகம்

மாருதி சுஸுகி மற்றும் ஹோண்டா கார்ஸ் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் அடுத்த வாரம் தங்களது இரு சிறந்த கார்களை அறிமுகப்படுத்த உள்ளன.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 10, 2022, 09:49 AM IST
  • இந்த கார்கள் அடுத்த வாரம் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும்
  • ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மற்றும் 2022 எர்டிகா
  • இந்த இரண்டு வாகனங்களும் வலுவான அம்சங்களைக் கொண்டுள்ளன
பட்ஜெட் விலையில் அடுத்த வாரம் இந்தியாவில் இந்த சிறந்த கார்கள் அறிமுகம் title=

புதுடெல்லி: புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய வாகன உற்பத்தியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாருதி சுஸுகி முதல் டாடா, ஹூண்டாய் முதல் ஹோண்டா வரை அனைத்து நிறுவனங்களும் இன்னும் சில தினங்களில் புதிய கார்களை அறிமுகம் செய்யவுள்ளன. ஆனால் இன்று அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கார்களை பற்றி காண உள்ளோம்.

புதிய மாருதி சுசுகி எர்டிகா மற்றும் அனைத்து புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ஏப்ரல் 2022 இல் வெளியிடப்படும். இந்த இரண்டு கார்களும் விற்பனையில் சிறப்பாக செயல்படுகின்றன. 

மேலும் படிக்க | 16 எம்பி செல்பி கேமரா மோட்டோரோலாவின் விலை இவ்வளவு தானா.!

2022 ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் வகைகள்
ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி சந்தையில் நுழைந்தவுடன் காம்பாக்ட் செடான் செக்மென்ட்டை வேறு லெவலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த காரில் ஹோண்டாவின் i-MMD EHEV ஹைப்ரிட் சிஸ்டம் இரண்டு மின்சார மோட்டார்களுடன் வரும். இந்த அமைப்பின் மூலம், புதிய ஹோண்டா சிட்டியையும் மின்சாரத்தில் மட்டுமே இயக்க முடியும். டொயோட்டா கேம்ரியை முறியடித்து, இந்தியாவில் விற்கப்படும் மலிவான செல்ஃப்-சார்ஜிங் ஹைப்ரிட் கார் என்ற பெருமையை இது பெற உள்ளது. ஹோண்டா சிட்டியின் புதிய ஹைபிரிட் மாறுபாடு 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும், இது 98பிஎஸ் பவரையும் 127என்எம் உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. ஹைபிரிட் சிஸ்டம் புதிய காரை வேகமாக உருவாக்குவது மட்டுமின்றி, அதன் மைலேஜும் கடுமையாக அதிகரிக்கும்.

இதன் விலை என்ன
காரில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 109 பிஎஸ் பவரையும், 253 என்எம் பீக் டார்க் திறனையும் வழங்கும். காரின் இன்ஜினில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஹோண்டா இந்தியா புதிய சிட்டி ஹைப்ரிட்டுக்கு மூன்று முறைகளை வழங்கியுள்ளது, அதில் ப்யூர் இவி, ஹைப்ரிட் மற்றும் எஞ்சின் மட்டும் அடங்கும். ஹைப்ரிட் அமைப்பை நிறுவிய பிறகு, காரின் மைலேஜ் லிட்டருக்கு 27.78 கிமீ ஆகும். ஹோண்டா இந்த காரை இந்திய சந்தையில் போட்டி விலையில் அறிமுகப்படுத்த உள்ளது. ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரூ.17.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வெளியிடப்படலாம் என்று ஊகிக்கப்படுகிறது. அதன் தற்போதைய பெட்ரோல் மாறுபாட்டின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.23 லட்சம் ஆகும்.

2022 இல் நிறுவனத்தின் 8 புதிய வாகனங்கள்
எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் தற்போதைய மாடலில் இருந்து 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் 105 PS ஆற்றலை உருவாக்குகிறது, இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வருகிறது, இது பெட்ரோலைச் சேமிக்க முறுக்குவிசையை வழங்குகிறது. இங்கு வாடிக்கையாளர்கள் தொழிற்சாலை பொருத்தப்பட்ட CNG மாறுபாட்டையும் பெறுகின்றனர். 2022 ஆம் ஆண்டில் 8 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தும் நிறுவனத்தின் திட்டத்தில் எர்டிகா ஃபேஸ்லிஃப்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில், இது ரெனால்ட் ட்ரைபர், மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் வரவிருக்கும் கியா கேரன்ஸ் ஆகியவற்றுடன் போட்டியிடும்.

மேலும் படிக்க | Tata Neu: வந்துவிட்டது டாடாவின் சூப்பர் ஆப், குஷியில் பயனர்கள், கலக்கத்தில் பிற ஆப்-கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News