கூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப்ஸைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு போன்களில் அழைப்புகளைப் பதிவு செய்ய முடியாது. கூகுள் நிறுவனம் எடுத்துள்ள இந்த கொள்கை முடிவு மே 11 ஆம் தேதியான இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகளின்படி, மூன்றாம் தரப்பு அழைப்பு செயலிகளான ரெக்கார்டிங் செயலி மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் அழைப்பை பதிவு செய்ய முடியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஊர் சுத்த உதவும் 5 டெக்னாலஜி டிப்ஸ்


பாதுகாப்பு காரணங்களுக்காக கால் ரெக்கார்டிங் செயலி நிறுத்தப்படுவதாக கூகுள் கூறுகிறது. கால் ரெக்கார்டிங் ஆப் பல டெவலப்பர்கள் நியாயமற்ற முறையில் பல அனுமதிகளைப் பெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. அவை தனிநபர் பாதுகாப்புகளுக்கும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. மேலும், இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. கால் ரெக்கார்டிங் ஆப் தொடர்பான சட்டம் நாட்டுக்கு நாடு மாறுபடும். 



இந்த சட்டங்களை செயலிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. சில செயலிகள் விருப்பும் அனுமதியை சில நாடுகள் கொடுக்க மறுக்கின்றன. இந்த சட்ட நடைமுறைகள் கூகுளின் செயல்பாட்டுக்கு தொடர்ச்சியாக பிரச்சனைகளை கொண்டு வருவதால் கூகுள் நிறுவனம் இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளது. அதேநேரத்தில், ஸ்மார்ட்போன்களிலேயே இருக்கும் அழைப்பு பதிவு செய்யும் செயலிகள் தொடர்ந்து செயல்படும். அவற்றில் எந்த மாறுபாடும் இருக்காது. 


மேலும் படிக்க | அதிரடியான ரூ.87 பிரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது BSNL: பயனர்கள் செம ஹேப்பி


கூகுளின் புதிய நடைமுறையால் மூன்றாம் தரப்பு செயலிகளைக் கொண்டு கால் ரெக்கார்டிங் பயன்படுத்துபவர்களுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது. அவர்கள் இனி தங்கள் ஸ்மார்ட்போனில் கால் ரெக்கார்டிங் செய்ய முடியாது. மாறாக, கால் ரெக்கார்டிங் அம்சம் கொண்ட புதிய ஸ்மார்ட்போனை அவர்கள் வாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கூகுள் எடுத்துள்ள இந்த முடிவு வர்த்தக ரீதியாக ஸ்மார்ட்போன் சந்தையில் கணிசமான விற்பனையை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR