அதிரடியான ரூ.87 பிரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது BSNL: பயனர்கள் செம ஹேப்பி

BSNL Prepaid Plan: தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 11, 2022, 02:38 PM IST
  • பிஎஸ்என்எல் நிறுவனம் 87 ரூபாய்க்கு ஒரு அதிரடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
  • பயனர்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவச வரம்பற்ற அழைப்பு வசதியையும் பெறுகிறார்கள்.
அதிரடியான ரூ.87 பிரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது BSNL: பயனர்கள் செம ஹேப்பி title=

பிஎஸ்என்எல் புதிய ரூ 87 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது: ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா ஆகியவை சில மாதங்களுக்கு முன்பு தங்கள் திட்டங்களின் விலைகளை அதிகரித்தன. அதன் பிறகு மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பல மலிவான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. 

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு வட்டத்திலும் இதற்கான வவுச்சர் கிடைக்காமல் போகலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் பலன்களைப் பார்த்த பிறகு, இந்தத் திட்டம் மிகச்சிறந்த திட்டம் என்பது விளங்கும். குறைந்த செலவில் அதிக பலன்களை எதிர்பார்க்கிறவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் நல்லது. பிஎஸ்என்எல்-இன் புதிய ரூ.87 ப்ரீபெய்ட் திட்டம் வழங்கும் முழுமையான பலன்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

பிஎஸ்என்எல் ரூ 87 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் அதன் ரூ.87 ப்ரீபெய்ட் திட்டத்தை மொத்தம் 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. திட்டத்துடன் தொகுக்கப்பட்ட அனைத்து இலவச வசதிகளும் 14 நாட்களுக்கு பயனர்களுக்குக் கிடைக்கும். ரூ.87 திட்டமானது 1ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது (அதாவது மொத்தம் 14ஜிபி). அதன் பிறகு மீதமுள்ள நாட்களுக்கு இதன் வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இது தவிர, பயனர்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் இலவச வரம்பற்ற அழைப்பையும் பெறுகிறார்கள்.

மேலும் படிக்க | ஜியோவை தொடர்ந்து அசத்தலான Disney+ Hotstar பிளான்களை கொண்டுவந்த ஏர்டெல்: விவரம் இதோ

இந்த திட்டம் அனத்து வட்டங்களிலும் கிடைக்காது

பிஎஸ்என்எல் ஹார்டி கேம்ஸ் மொபைல் சேவையை ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் மூலம் இணைக்கும். இது பிஎஸ்என்எல் வழங்கும் தனித்துவமான ப்ரீபெய்ட் திட்டமாகும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, பிஎஸ்என்எல் ஒவ்வொரு வட்டத்திலும் இந்த திட்டத்தை இன்னும் வழங்கவில்லை. சத்தீஸ்கர், அசாம் போன்ற மாநிலங்களுக்கு இத்திட்டம் கிடைக்காது. பட்டியலில் இன்னும் பல இடங்கள் இருக்கலாம். பயனர்கள் பிஎஸ்என்எல்-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

ரூ.6க்கு தினமும் 1ஜிபி டேட்டாவைப் பெறுங்கள்

ஒரு நாளுக்கு ஏற்ப திட்டத்தைப் பார்த்தால், சுமார் ரூ.6 செலவில் 1ஜிபி டேட்டாவை வாடைக்கையாளர்கள் பெறுவார்கள். அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சேவைகளுக்கு ஒரே நேரத்தில் ரூ.100க்கு மேல் செலுத்த விரும்பாத பயனர்களுக்கு இது நன்றாக வேலை செய்யும். நல்ல விஷயம் என்னவென்றால், ஒரு வாடிக்கையாளருக்குத் தேவையான அனைத்தும் இந்தத் திட்டத்தில் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் பலன்களைக் கருத்தில் கொண்டு பார்த்தால், 14 நாட்களுக்கான செல்லுபடியும் ஒரு குறையாகத் தெரியாது. 

மேலும் படிக்க | தனியார் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் பிஎஸ்என்எல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News