Old Car Tips: உங்கள் பழைய காரை இப்படி பார்த்துக்கோங்க... எப்பவும் புதுசு போல ஜொலிக்கும்
Car Tips: காரை நல்ல நிலையில் வைத்திருப்பது அவசியம். காரை நன்றாக பராமரிப்பதில் இரண்டு நன்மைகள் உள்ளன.
உங்களிடம் பழைய கார் இருக்கிறதா? அதை இப்போதைக்கு மாற்றும் எண்ணம் இல்லையா? அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பழைய காரை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் காரை நல்ல நிலையில் வைத்திருப்பது அவசியம். காரை நன்றாக பராமரிப்பதில் இரண்டு நன்மைகள் உள்ளன. முதலில் இது காரை ஓட்டுவதில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது, அதிக மைலேஜ் தரும். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இது முக்கியமாக உள்ளது. மற்றொரு நன்மை என்னவென்றால், நீங்கள் உங்கள் காரை விற்கச் சென்றால், உங்கள் காருக்கு நல்ல மதிப்பைப் பெறலாம்.
உங்கள் பழைய காரை எப்போதும் புதியது போல் வைத்திருப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்:
பிரேக்கிங் சிஸ்டத்தை பராமரிக்கவும்
வாகனத்தின் பிரேக்கிங் சிஸ்டம் மிக முக்கியமானது. காரின் பிரேக்கிங் அமைப்பை அவ்வப்போது சரிபார்க்க வேண்டியது அவசியம். மேலும் பழைய கார்களில் இது பாதுகாப்பு நோக்கத்தில் இது மிகவும் முக்கியமானது. ஆகையால் பிரேக் பேடுகள் தேய்ந்து மெலிந்துவிடாமல் உள்ளதா, பிரேக் திரவம் வெளியே வராமல், லீக ஆகாமல் உள்ளதா என்பதை அவ்வப்போது சோதித்துக்கொண்டே இருங்கள். பிரேக் திரவம் வெளியேறினால், உடனடியாக அதை சரிசெய்யவும். இது மிகவும் ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளவும்.
டயர்களை தவறாமல் செக் செய்யவும்
கால்கள் நம் உடலுக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் டயர்கள் நம் வாகனத்திற்கு முக்கியமானவை. அவற்றின் பராமரிப்பை, கவனிப்பை புறக்கணிக்காதீர்கள். அவ்வப்போது டயர்களை மாற்றிக்கொண்டே இருங்கள். மேலும் எப்போதும் டயர் கேஜை உங்களுடன் வைத்திருக்கவும். இதனால் காற்றழுத்தத்தை எளிதாக செக் செய்யலாம். டயரில் காற்றழுத்தம் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதை 30 மற்றும் 35 PSI க்கு இடையில் வைத்திருக்கலாம். நீங்கள் டயர்களை மாற்றினால், எப்போதும் நல்ல நிறுவனத்தின் டயர்களை வாங்குங்கள். லோக்கல் மற்றும் மலிவான டயர்களால் பிரச்சனை வரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | மணிக்கு 330 கிமீ டாப் ஸ்பீட் மைலேஜ் கொண்ட McLaren Artura கார் இந்தியாவில் அறிமுகம்
ஸ்டியரிங்க் அமைப்பை கவனித்துக்கொள்
ஸ்டியரிங்க் அமைப்பில் உள்ள சிக்கல் வாகனத்தின் இயக்கவியலில் இடையூறுகளுக்கு வழிவகுக்கும். மேலும் இது டயர்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். ஸ்டீயரிங் திரவம் சரியான நேரத்தில் மாற்றப்படுவதை எப்போதும் உறுதிசெய்து, ஸ்டீயரிங் அமைப்பை உகந்த நிலையில் வைத்திருக்க அவ்வப்போது ஒரு நிபுணர்கள் மூலம் செக் செய்யவும்.
விண்ட்ஷீல்ட் வைப்பர்களை கவனித்துக் கொள்ளுங்கள்
விண்ட்ஷீல்ட் வைப்பர்கள் சரியாக வேலை செய்கிறதா இல்லையா என்பதை தொடர்ந்து சரிபார்க்கவும். பல நேரங்களில் மழை அல்லது குளிர் நாட்களில் விசிபிலிட்டி குறைகிறது. பல விபத்துக்களில், முன்பக்க கண்ணாடி விண்ட்ஷீல்ட்கள் செயல்படாததால், ஓட்டுனர் தெளிவாக பார்க்க முடியாமல், மோதி விபத்து ஏற்பட்டிருக்கின்றது. ஆகையால், வைப்பர் பிளேடுகளை கவனமாக சரிபார்த்து, தேவைப்பட்டால் அவற்றை மாற்றவும். இவை சாதாரண விஷயமாகத் தோன்றலாம், ஆனால் அவை மிகவும் முக்கியமானவை. இது போன்ற சிறிய விஷயங்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
எரிபொருள் லைனை (ஃப்யூயல் லைன்) கவனிக்கவும்
பழைய கார்களின் எரிபொருள் குழாய்கள் அடிக்கடி வெடித்து, எண்ணெய் கசியத் தொடங்குகிறது. இதைப் புறக்கணித்தால், வாகனத்தில் தீ விபத்து ஏற்படும். இதனால் பல ஆபத்துகள் உண்டாகலாம். ஆகையால் கசிவு ஏற்பட்ட எரிபொருள் குழாய்களை உடனடியாக சரிசெய்யவும்.
கூடுதல் தகவல்
உங்களிடம் கார் அல்லது பைக் இருந்தால், நீங்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சனை ஒன்று உள்ளது. இது அடிக்கடி வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்வதுண்டு. வாகனங்களின் டயர்கள் விரைவாக தேய்ந்து போவதாக மக்கள் பலமுறை புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால், வாகனத்தின் டயர்கள் தேய்ந்து கிடப்பதற்குப் பின்னால், அந்த நிறுவனத்தை விட வாகன உரிமையாளரின் அலட்சியமே பெரிய காரணமாக உள்ளது. இதுமட்டுமின்றி, வாகனத்தின் டயர்கள் தேய்மானம் அடைந்தால், சாலை விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. டயர் தேய்மானத்தைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகளை இங்கே காணலாம்.
- டயர் அழுத்தத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்
- அவ்வப்போது டயர்களை மாற்றவும்
- டயர் சீலண்டை பயன்படுத்துங்கள்
- எப்போது கார் டயர்களை மாற்றுவது சரி?
மேலும் படிக்க | விரைவில் இந்திய சந்தையை கலக்க வரவுள்ள டாடா கார்கள்: முழு பட்டியல் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ