கார் பராமரிப்பு கண்ணை கட்டுதா? இந்த டிப்ஸ் சிறந்த மைலேஜ் பெற உதவும்
Mileage Tips & Tricks: சில எளிய உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்களைப் பின்பற்றி பெட்ரோலைச் சேமிக்க முடியும்.
மைலேஜை அதிகரிக்கும் டிப்ஸ்: பெட்ரோல்-டீசல் விலைகள் விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன. இது வரும் நாட்களில் குறையும் என்ற நம்பிக்கையும் இல்லை. வாகன பராமரிப்பு என்பது இப்போது அனவரது பட்ஜெட்டுக்கும் ஒரு சவாலாக உள்ளது, குறிப்பாக நான்கு சக்கர வாகனங்களை பராமரிப்பது மிகவும் கடினமாக உள்ளது.
கார் ஓட்டும் செலவும் பராமரிப்பு செலவும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் எரிபொருள் விலையேற்றத்தால் ஓட்டுநர்கள் இப்போது பெரும் அவதியில் உள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், சில எளிய உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்களைப் பின்பற்றி பெட்ரோலைச் சேமிக்க முடியும். இது உங்கள் பட்ஜெட்டில், சிறிய அளவிலாவது நிவாரணத்தை கொண்டு வரும். அந்த எளிய வழிமுறைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
காரில் தேவையற்ற பொருட்களை வைக்க வேண்டாம்
கார் ஏரோடைனமிக்ஸின் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில விஷயங்கள் காற்றின் துல்லியமான ஓட்டத்தைத் தடுக்கின்றன. இது காரில் காற்றழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் காரின் மைலேஜ் குறைகிறது. உங்கள் காரில் தனித்தனியாக நிறுவப்பட்ட ரூஃப் பார்ஸ், பாக்ஸேஜ் ஆகியவை காரின் ஏரோடைனமிக்ஸின் விளைவைக் குறைக்கின்றன. எனவே சிறந்த மைலேஜுக்கு, காரில் கூடுதலான மைலேஜைக் குறைக்கும் பொருட்களை ஏற்ற வேண்டாம்.
மேலும் படிக்க | Maruti Suzuki கார்கள் மீது தாறுமாறான ஆஃபர்கள்; உடனே கார் வாங்க ஒடுங்க
ஏசி பயன்பாட்டை குறைக்கவும்
கோடை காலத்தில், நம் அனைவருக்கும் ஏர் கண்டிஷனர் தேவை. அதுவும் காருக்குள் கண்டிப்பாக ஏசி தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் வழக்கமாக ஏசியை தொடர்ந்து ஆன் செய்து வைத்திருப்போம். முடிந்தவரை காரின் கேபின் குளிர்ந்தவுடன் ஏசியை அணைக்கவும். இந்த செயல்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் காரில் அதிகமான எரிபொருள் சேமிக்கப்படுகிறது.
தேவையான அளவு பெட்ரோல் போடுங்கள்
ஒவ்வொரு முறை பெட்ரோல் பம்ப் செல்லும் போதும் காரின் டேங்க் நிரப்பினால், தெரியாமல் காரில் தேவையில்லாத சுமை ஏற்றப்படுகிறது. ஆகையால், உங்கள் காரில் இருந்து சிறந்த மைலேஜ் பெற விரும்பினால், காரில் தேவையான அளவு பெட்ரோலை நிரப்பவும். இது காரில் தேவையான சுமையை மட்டும் ஏற்றி மைலேஜின் அடிப்படையில் நேர்மறையான விளைவைப் பெற உதவுகிறது.
பயணக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தவும்
உங்கள் கார் உற்பத்தியாளர் க்ரூஸ் கன்ட்ரோல் அம்சத்தை வழங்கியிருந்தால், அதைத் தொடர்ந்து பயன்படுத்தவும். இதைப் பயன்படுத்துவதன் மூலம், கார் நிலையான வேகத்தில் இயங்குகிறது, மைலேஜும் அதிகரிக்கிறது. இது தவிர, ஓட்டுநருக்கும் தொந்தரவு இல்லாத நிம்மதியான பயணம் கிடைக்கும். இந்த அம்சம் நீண்ட தூரம் பயணிக்கும் போது பெட்ரோலை மிச்சப்படுத்துகிறது.
அழுக்கான காற்று வடிகட்டியை மாற்றவும்
காரின் ஏர் ஃபில்டர் அழுக்காக இருந்து, சரியாக வேலை செய்யவில்லை என்றால், இன்ஜினில் தேவையற்ற அழுத்தம் ஏற்படும், அதனால் மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது. காரின் ஃபில்டரை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருந்தால், சரியான காற்றோட்டம் இன்ஜினுக்கு கிடைப்பதுடன், இன்ஜின் எந்த பிரச்சனையும் இல்லாமல் வேலை செய்து சிறந்த மைலேஜை தரும்.
மேலும் படிக்க | கார் வாங்க சரியான நேரம்: மே மாதத்தில் டாடா கார்களில் அசத்தும் தள்ளுபடிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR