கார் வாங்க சரியான நேரம்: மே மாதத்தில் டாடா கார்களில் அசத்தும் தள்ளுபடிகள்

Tata Cars Offers: விற்பனையை அதிகரிக்க, மே 2022ல் டாடா நிறுவனம் வலுவான சலுகைகளை வழங்கியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 13, 2022, 03:17 PM IST
  • மே மாதத்தில், டாடா நிறுவனம் கார்களில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.45,000 வரையிலான மொத்த நன்மைகளை வழங்கியுள்ளது.
  • டாடா மோட்டார்ஸ் அதன் பிரபலமான ஹேட்ச்பேக் டியாகோ மீது ரூ.23,000 வரை சலுகைகளை வழங்குகிறது.
  • டாடா மோட்டார்ஸ் பிரபலமான நெக்ஸான் எஸ்யூவியில் ரூ.20,000 வரை மொத்த சலுகைகளை வழங்கியுள்ளது.
கார் வாங்க சரியான நேரம்: மே மாதத்தில் டாடா கார்களில் அசத்தும் தள்ளுபடிகள்

டாடா கார் சலுகைகள்: கடந்த சில ஆண்டுகளாக, டாடா மோட்டார்ஸ் விற்பனையில் பெரிய அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விற்பனையை அதிகரிக்க, மே 2022ல் நிறுவனம் வலுவான சலுகைகளை வழங்கியுள்ளது. 

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டியாகோ, டாடா டிகோர், டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகியவற்றில் பல்வேறு தள்ளுபடிகளை வழங்கியுள்ளது. ரொக்கத் தள்ளுபடிகள்/நுகர்வோர் சலுகைகள், கார்ப்பரேட் தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்ற போனஸ்கள் ஆகியவை இதில் அடங்கும். இந்த கார்களில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.45,000 வரையிலான மொத்த நன்மைகளை நிறுவனம் வழங்கியுள்ளது. இந்தச் செய்தியில், கார்களின் ஆரம்ப விலைகள் மற்றும் இவற்றில் கிடைக்கும் தள்ளுபடிகள் பற்றி தெரிந்துகொள்ளலாம். 

டாடா டியாகோ
மே மாதத்தில், டாடா மோட்டார்ஸ் அதன் பிரபலமான ஹேட்ச்பேக் டியாகோவில் ரூ.23,000 வரை சலுகைகளை வழங்குகிறது. இந்தியாவில் இந்த காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.23 லட்சம் ஆகும். காரின் எக்ஸ்இ, எக்ஸ்எம் மற்றும் எக்ஸ்டி வகைகளில் ரூ. 10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸை நிறுவனம் வழங்கியுள்ளது. 

மேலும் கார்ப்பரேட் தள்ளுபடிக்கு ரூ. 3,000 தள்ளுபடி கிடைக்கும். எக்ஸ்இஸட் (XZ) மற்றும் இதை விட விலையுயர்ந்த வகைகளில் ரூ.10,000 நுகர்வோர் தள்ளுபடி, ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவற்றை நிறுவனம் வழங்குகிறது.

டாடா டிகோர்
இது நிறுவனத்தின் மிகவும் பிரபலமான செடான் ஆகும். இதில் மொத்தம் ரூ.23,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.83 லட்சமாகும். டிகோரின் எக்ஸ்இ, எக்ஸ்எம் மற்றும் எக்ஸ்டி வகைகளில் ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,000 கார்ப்பரேட் தள்ளுபடி கிடைக்கிறது. எக்ஸ்இஸட் (XZ) மற்றும் காரின் உயர் வகைகளுக்கு ரூ.10,000 வரை நுகர்வோர் தள்ளுபடிகள், ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,000 கார்ப்பரேட் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

மேலும் படிக்க | ஹூண்டாய் கார் வாங்க இதுவே சரியான நேரம்; அதிரடி தள்ளுபடி அறிவிப்பு 

டாடா நெக்ஸான்
டாடா மோட்டார்ஸ் பிரபலமான நெக்ஸான் எஸ்யூவியில் ரூ.20,000 வரை மொத்த சலுகைகளை வழங்கியுள்ளது. இதில் ரூ.15,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 வரையிலான கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். 

எஸ்யூவியின் பெட்ரோல் மாறுபாட்டில் வாடிக்கையாளர்களுக்கு எந்த எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்காது. டாடா நெக்ஸான் அடிப்படை மாறுபாட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.43 லட்சத்தில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

டாடா ஹாரியர்
டாடாவின் சக்திவாய்ந்த எஸ்யூவி ஹாரியர் ரூ. 45,000 வரையிலான சலுகைகளைப் பெற்றுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.14.53 லட்சமாகும். டாடா ஹாரியரின் எக்ஸ்இ மற்றும் எக்ஸ்எம் வகைகளில் ரூ.40,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

டாடா சஃபாரி
நிறுவனம் இந்த எஸ்யுவி-யில் மொத்தம் ரூ 40,000 வரை பலன்களை வழங்குகிறது. டெல்லியில் இந்த எஸ்யூவியின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.15.02 லட்சம் ஆகும். நிறுவனம் சஃபாரியின் எக்ஸ்இ மற்றும் எக்ஸ்எம் வகைகளுக்கு ரூ.40,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கியுள்ளது.

மேலும் படிக்க | கார் வாங்கணுமா? இந்த மாதம் வாங்கினால் கிடைக்கும் அதிரடி தள்ளுபடிகள், சலுகைகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News