நாட்டில் ஆட்டோமொபைல் துறையின் இரு சக்கர வாகனப் பிரிவில், நல்ல மைலேஜ் தரும் பல பைக்குகள் உள்ளன. இவை தங்கள் ஸ்டைல் மற்றும் மலிவு விலை காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்படுகின்றன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறைந்த விலையில், குறைந்த பராமரிப்பில் இயங்கும், நல்ல மைலேஜ் அளிக்கும் பைக்கை நீங்களும் வாங்க விரும்பினால், இந்த பிரிவில் உள்ள முதல் 3 மலிவான பைக்குகளின் விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


இங்கு சொல்லப்பட்டிருக்கும் முதல் 3 மலிவான பைக்குகளின் விவரங்களில், அவற்றின் விலை, மைலேஜ், அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றிய முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உங்கள் விருப்பம் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப சரியான விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.


ஹீரோ ஹெச்.எஃப் 100: ஹீரோ ஹெச்.எஃப் 100 இந்த பிரிவின் மிகவும் மலிவான பைக் ஆகும். இவை இவற்றின் மைலேஜுக்காக அதிகம் விரும்பப்படுகின்றன. நிறுவனம் இந்த பைக்கை ஒரே ஒரு வகையில் மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. பைக்கில் 8.36 பிஎஸ் பவரையும், 8.05 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்கும் 97.2 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. 


மேலும் படிக | TATA-வின் அனைத்து கார்களிலும் இந்த மாதம் பம்பர் தள்ளுபடிகள், அசத்தல் சலுகைகள் 


இந்த பைக் லிட்டருக்கு 70 கிலோமீட்டர் மைலேஜ் தருவதாக பைக்கின் மைலேஜ் குறித்து நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இது ARAI மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளது. Hero HF 100 இன் ஆரம்ப விலை ரூ.51,200 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆகும்.


பஜாஜ் CT 100: பஜாஜ் CT 100 அதன் ஸ்டைல், மைலேஜ் மற்றும் அதன் விலை ஆகியவற்றிற்காக நன்கு விரும்பப்படுகிறது. இதை நிறுவனம் ஒரே ஒரு மாறுபாட்டுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் 7.9 பிஎஸ் பவரையும், 8.34 மிமீ பீக் டார்க்கையும் உருவாக்கும் 102 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.


பைக்கின் மைலேஜ் குறித்து, இது லிட்டருக்கு 74 கிமீ மைலேஜ் தருவதாகவும், இந்த மைலேஜை ARAI சான்றளித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. பஜாஜ் CT 100 இன் ஆரம்ப விலை ரூ. 51,802 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆகும்.


ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்: ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் என்பது நீண்ட மைலேஜ் மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பு கொண்ட பைக் ஆகும். இதில் நான்கு வகைகளை நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.


பைக்கின் மைலேஜ் குறித்து, நிறுவனம், லிட்டருக்கு 83 கிலோமீட்டர் மைலேஜ் தருவதாகவும், இந்த மைலேஜை ARAI சான்றளித்துள்ளது என்றும் கூறியுள்ளது. ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸின் ஆரம்ப விலை ரூ.54,480 ஆகும். இந்த விலை டாப் வேரியண்டில் ரூ.63,770 வரை செல்கிறது.


மேலும் படிக்க | Komaki Venice மின்சார ஸ்கூட்டர்: அசத்தும் அம்சங்கள், ஃபுல் சார்ஜில் 120 கிமீ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR