Tata Motors Offer: டாடா மோட்டார்ஸின் விற்பனை சில காலமாக மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. நிறுவனம் டிசம்பர் 2021 மற்றும் ஜனவரி 2022 ஆகிய மாதங்களில் ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. மீதமுள்ள உற்பத்தி நிறுவனங்கள் விற்பனையில் ஏமாற்றம் அடைந்த நிலையிலும், தற்போதும் டாடாவின் மேஜிக் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.
வலுவான விற்பனைக்குப் பிறகும் டாடா மோட்டார்சின் வேகம் குறையவில்லை. நிறுவனம் பிப்ரவரி 2022 இல் அதன் அனைத்து கார்களுக்கும் மாடலைப் பொறுத்து ரூ.60,000 வரை சலுகைகளை (Car Offers) வழங்கியுள்ளது.
டாடா ஹாரியர்
டாடா ஹாரியரில் ரூ.60,000 வரை மொத்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவை கார்களின் இருப்பு இருக்கும் வரை வழங்கப்படும். நிறுவனம் 2021 மாடல் ஹாரியரில் ரூ.20,000 ரொக்க தள்ளுபடியையும், 2022 மாடலுக்கு ரூ.40,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸையும் வழங்குகிறது. ஹாரியர் டார்க் பதிப்பில் ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.25,000 வரை சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
டாடா சஃபாரி
மீதமுள்ள 2021 மாடல்களில் வழங்கப்படுவது போலவே சஃபாரி SUV-யிலும் டாடா மொத்தம் ரூ.60,000 வரை தள்ளுபடி வழங்கியுள்ளது. 2022 மாடல் டாடா சஃபாரியில் ரூ. 40,000 வரை மொத்த பலன்கள் வழங்கப்பட்டுள்ளன. எஸ்யூவியின் கோல்ட் எடிஷனில் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் எந்த நன்மையையும் வழங்கவில்லை.
ALSO READ | Honda கார் வாங்க திட்டமா? இந்த மாதம் அனைத்து கார்களிலும் கிடைக்கும் அதிரடி தள்ளுபடி
டாடா டியாகோ மற்றும் டிகோர்
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) டியாகோவில் ரூ. 30,000 வரை மொத்த சலுகைகளை வழங்கியுள்ளது. இதில் ரூ. 10,000 வரை ரொக்கத் தள்ளுபடி மற்றும் ரூ. 20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவை அடங்கும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Tiago CNG இல் எந்த சலுகையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிகோர் காம்பாக்ட் செடானில் ரூ. 25,000 வரை மொத்த நன்மைகள் கிடைக்கின்றன. இதிலும், காரின் சிஎன்ஜி மாடலில் எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை.
டாடா நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ்
Tata Nexon இல், நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 15,000 வரை மொத்த பலனை வழங்கியுள்ளது. இது எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்கப்படுகிறது. கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 பலன் கிடைக்கும். நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் ஆல்ட்ரோஸில் மொத்தமாக 10,000 ரூபாய்க்கான நன்மைகள் கிடைக்கின்றன. இது கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
ALSO READ | Upcoming Cars: இந்த மாதம் அறிமுகம் செய்யப்படும் 4 கார்களில் 2 மாருதி கார்களும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR