Top 7 Mid Size SUV: உங்கள் பட்ஜெட்டுக்குள் கச்சிதமாய் பொருந்தும் அட்டகாசமான கார்கள்!!
குறைந்த பட்ஜெட்டில் ஒரு எஸ்யூவி வாங்க நினைத்தால், சந்தையில் நீங்கள் தேர்ந்தெடுக்க பல ஆப்ஷன்கள் உள்ளன. உங்கள் விருப்பப்படி காரை தேர்வு செய்யலாம்.
Top mid size SUV India 2021: இன்று இந்தியா போன்ற ஒரு நாட்டில், பெரும்பாலான மக்கள் தாங்களும் ஒரு SUV-ஐ சொந்தம் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். சந்தையில் எஸ்யூவி பிரிவின் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
நீங்கள் 15 லட்சம் என்ற பட்ஜெட்டில் ஒரு எஸ்யூவி வாங்க நினைத்தால், சந்தையில் நீங்கள் தேர்ந்தெடுக்க பல ஆப்ஷன்கள் உள்ளன. உங்கள் விருப்பப்படி காரை தேர்வு செய்யலாம். சில நடுத்தர அளவிலான எஸ்யூவிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இது நீங்கள் உங்க்களுக்கேற்ற காரை தேர்ந்தெடுக்க உதவும்.
ஹூண்டாய் கிரேட்டா
கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் (Hyundai), நடுத்தர அளவிலான எஸ்யூவி கிரேட்டாவை இந்தியாவில் விற்பனை செய்கிறது. இது இந்தியாவில் மிகவும் பிரபலமான கார் ஆகும். இதன் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .10,16,000 முதல் ரூ .17,78,000 வரை உள்ளது.
மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா
நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகியின் (Maruti Suzuki) நடுத்தர அளவிலான எஸ்யூவி மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மிக பிரபலமான கார் ஆகும். இதுவும் நன்கு சோதிக்கப்பட்ட எஸ்யூவி. இதன் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .7,51,500 முதல் ரூ .11,25,500 வரை உள்ளது.
ALSO READ: Audi RS5 Sportback காரின் அட்டகாச அறிமுகம்: முழு விவரம் இதோ!!
ஃபோர்டு ஈகோஸ்போர்ட்
ஃபோர்டு மோட்டர்ஸின் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் நடுத்தர அளவிலான எஸ்யூவியாக சந்தையில் ஒரு நல்ல தேர்வாக உள்ளது. இது பல்வேறு வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் ஸ்போர்ட்டி தோற்றத்தில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .8,19,000 ஆகும்.
கியா செல்டோஸ்
இந்த நிறுவனம் இந்தியாவுக்கு வந்து நீண்ட காலம் ஆகவில்லை, ஆனால் அது பிரம்மாண்டமாக வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கியாவின் (Kia) நடுத்தர அளவிலான எஸ்யூவியான செல்டோஸ் உங்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கலாம். இதில் நீங்கள் பல சிறந்த அம்சங்களையும் பெறுவீர்கள். இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை 9.95 லட்சம் ஆகும்.
மஹிந்திரா XUV300
மஹிந்திராவின் (Mahindra) மஹிந்திரா XUV300 நடுத்தர அளவிலான SUV, பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் கிடைக்கிறது. இதன் புனே எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .7,95,963 முதல் ரூ .11,70,705 வரை உள்ளது.
நிசான் கிக்ஸ்
நிசான் மோட்டார்ஸின் நடுத்தர எஸ்யூவி நிசான் கிக்ஸும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .9,49,990 ஆகும்.
வோக்ஸ்வாகன் டைகுன்
அறிமுகமாகவுள்ள வோக்ஸ்வாகனின் புதிய எஸ்யூவி டைகுனையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம். இருப்பினும், இந்த கார் அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் 23 அன்றுதான் அறிமுகப்படுத்தப்படும். இதில் நீங்கள் பல சிறந்த அம்சங்களையும் பெற முடியும்.
ALSO READ: Tata Cheapest SUV: தீபாவளி ரிலீசாக மலிவு விலையில் பட்டையைக் கிளப்ப வருகிறது Tata HBX
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR