Audi RS5 Sportback காரின் அட்டகாச அறிமுகம்: முழு விவரம் இதோ!!

ஆடி இந்தியாவின் தலைவர் பல்பீர் சிங் தில்லன் கூறுகையில், ஆடியின் அனைத்து 'ஸ்போர்ட் மாடல்களுக்கும்' இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளதாகத் தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 19, 2021, 04:38 PM IST
Audi RS5 Sportback காரின் அட்டகாச அறிமுகம்: முழு விவரம் இதோ!! title=

Audi RS5 Sportback: பிரீமியம் மற்றும் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இன்று இந்தியாவில் புதிய கார் ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் (Audi RS5 Sportback) மாடலை அறிமுகப்படுத்தியது. நிறுவனம் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட காரை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் (Audi launches 1.04 crore car in India) என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிஐ செய்தியின்படி, ஆடி இந்தியா இன்று இந்த தகவலை அளித்துள்ளது.

ஆடி (Audi) இந்தியாவின் தலைவர் பல்பீர் சிங் தில்லன் கூறுகையில், ஆடியின் அனைத்து 'ஸ்போர்ட் மாடல்களுக்கும்' இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளதாகத் தெரிவித்தார்.

காரின் விலை

ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடியின் புதிய கார் ஆர்எஸ் 5 ஸ்போர்ட்பேக் மாடல், இந்தியாவில் ரூ .1.04 கோடியில், (எக்ஸ்-ஷோரூம் விலை) தொடங்குகிறது. 

RS 5 ஸ்போர்ட்பேக் இன்ஜின்

ஆர்எஸ் 5 ஸ்போர்ட் பேக்கில் 2.9L V6 twin-turbo petrol engine உள்ளது. இது 450HP பவரை உருவாக்குகிறது. இது முழுமையாக முடிக்கப்பட்ட யூனிட்டாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

ALSO READ: Audi e-tron Launch: எலக்ட்ரிக் காரில், டெஸ்லாவை முந்துகிறதா AUDI..!!

இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம்

காரின் (Cars) அறிமுகம் குறித்து ஆடி இந்தியாவின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் கூறுகையில், “ஆடி ஆர்எஸ் 5 முதன்முறையாக இந்தியாவிற்கு ஸ்போர்ட் பேக்காக வருகிறது. அன்றாட தேவைகளுக்கு அப்பாற்பட்ட பணிகளுக்காக ஆடி ஏஸ்-ஐ பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது சரியான தேர்வாக இருக்கும்” என அவர் கூறினார். 

3.9 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகம்

ஆர்எஸ் 5 ஸ்போர்ட் பேக் 0 முதல் 100 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டது என்றும் அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

டெஸ்ட் டிரைவிற்கு முன்பதிவு செய்யலாம்

இந்த காரை வாங்குவதற்கு முன் நீங்களே அதை ஓட்டிப் பார்க்க விரும்பினால், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.audi.in/ இல் ஆன்லைன் டெஸ்ட் டிரைவ் முன்பதிவு செய்யலாம். 

ALSO READ: Tata Cheapest SUV: தீபாவளி ரிலீசாக மலிவு விலையில் பட்டையைக் கிளப்ப வருகிறது Tata HBX

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News