புதுடெல்லி: இந்தியா உட்பட உலகம் முழுவதும் மின்சார கார்களுக்கான (Electric Cars) தேவை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஒருபுறம் உச்சத்தில் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கருத்தில் கொண்டு மக்கள் தற்போது மின்சார கார்களின் பக்கம் நகர்ந்து வருகின்றனர். மறுபுறம் எலக்ட்ரிக் கார்களின் விலை வாடிக்கையாளர்களுக்கு சவாலாக உள்ளது. எனவே, வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) தனது மின்சார காரை மலிவான விலையில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாடா மோட்டார்ஸ் (TATA Motors) அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, டாடா டிகோர் எலெக்ட்ரிக் (Tata Tigor Electric) ஆகஸ்ட் 31 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே, இந்த கார் மீது மக்களிடையே மிகுந்த உற்சாகம் உள்ளது. ஊடக அறிக்கையின்படி, இந்த கார் டீலர்ஷிப்களை அடையத் தொடங்கியுள்ளது மற்றும் சில அம்ச விவரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன, இதில் புதிய டாடா டிகோர் ஈவி (New Tata Tigor EV) ஒரு முறை சார்ஜ் செய்தால் 350 கிமீ தூரம் வரை பயணிக்க உதவும் என்று தெரியவந்துள்ளது.


ALSO READ | Tata SUV PUNCH காரை அறிமுகப்படுத்துகிறது டாடா… இதன் சிறப்பம்சங்கள்


டாடா மோட்டார்ஸ் புதிய டைகோரின் டீஸர் வீடியோவையும் வெளியிட்டது, இது காரின் தோற்றம் மற்றும் அம்சங்கள் பற்றிய முழு விவரத்தை வெளிப்படுத்தியது. வீடியோவின் படி, Ziptron EV தொழில்நுட்பம் டாடா டிகோர் EV இல் அதிகம் விற்பனையாகும் மின்சார SUV Tata Nexon EV போல பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜிப்டிரான் இயங்கும் மின்சார வாகனத்தைப் பொறுத்தவரை, டாடா மோட்டார்ஸ் அதன் பேட்டரி வரம்பு 250 கிமீ என்று கூறுகிறது. இப்போது புதிய பவர்டிரெயினில் பேட்டரி வீச்சு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டிகோர் ஈவி 10-12 லட்சம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாம்.


 



 


டாடாவில் இருந்து வரும் இந்த எலக்ட்ரிக் காரில் 55kW மின்சார மோட்டார் மற்றும் 26kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் இருக்கும், இது 74bhp (55kW) வரை சக்தி மற்றும் 170Nm வரை டோற்க் ஜெனரேட் கொண்டதாக இருக்கும். மேலும் இந்த வாகனம் வெறும் 5.9 வினாடிகளில், 60 கிமீ வேகத்தில் ஓட முடியும் என்று கூறப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் இந்த காரில் 8 ஆண்டுகள் மற்றும் 1,60,000 கிமீ வரை பேட்டரி ஆயுளுக்கு உத்தரவாதம் அளிக்கும். அதே நேரத்தில், வீட்டில் சார்ஜ் செய்ய 8.5 மணி நேரம் ஆகும். டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் EV தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகிறது. நீங்கள் அதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்களுக்கு இயக்கலாம்.


ALSO READ | Tata-வின் Cheapest Electric Car: ஒரே சார்ஜில் 500 கி.மீ. ஓடும் அட்டகாசமான Altroz EV


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR