மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர் நிறுவனமான டார்வின் (Darwin) பிளாட்ஃபார்ம் குரூப் ஆப் கம்பெனிஸ், இந்தியாவில் மூன்று இரு சக்கர மின்சார வாகனங்களை அறிமுகம் செய்தது. அவை, D-5, D-7  மற்றும் D-14 ஆகிய மூன்று வாகனங்களாகும். வலுவான வடிவமைப்பு, சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த மூன்று மாடல்களையும் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மூன்று மின்சார வாகனங்களின் (Electric Vehicles) எக்ஸ்-ஷோரூம் விலை முறையே ரூ.68,000, ரூ.73,000 மற்றும் ரூ.77,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், இந்த மின்சார ஸ்கூட்டரை 70 முதல் 120 கிமீ வரை ஓட்ட முடியும்.


ஓலாவை விட டார்வின் மிகவும் மலிவானதாக உள்ளது


ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்கள் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ஓலாவின் S1 மற்றும் S1 Pro ஆகிய ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் அதிக தேவை காணப்படுகின்றது. இவை இரண்டின் விலையும் முறையே ரூ.1 லட்சம் மற்றும் ரூ.1.30 லட்சமாக உள்ளது.


ALSO READ: Ola EVக்கு போட்டியாக களமிறங்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்


நிறுவனம் S1 ப்ரோவில் (Ola S1 Pro) அதிக சக்திவாய்ந்த பேட்டரியை அளிக்கின்றது. மேலும் இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 181 கிமீ வரை இயங்கும் என்று கூறப்படுகிறது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விட டார்வினின் ஸ்கூட்டர்கள் மிகவும் மலிவானவை என்பது குறிப்பிடத்தக்கது.


மற்ற மின்சார ஸ்கூட்டர்களை ஒப்பிடும்போது இவை மிகவும் விலை குறைந்தவை
சிம்பிள் ஒன் மற்றும் ஏதர் எனர்ஜி (Ather Energy) ஆகியவையும் தங்கள் மின்சார ஸ்கூட்டர்களுடன் சந்தையில் இறங்கி ஓலா மின்சார ஸ்கூட்டர்களுடன் போட்டியில் உள்ளன. இதில் சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஏத்தர் 450எக்ஸ் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.32 என்ற அளவிலும் விற்பனை செய்யப்படுகிறது.


பஜாஜ் சேதக்கின் மின்சார ஸ்கூட்டர் ரூ. 1.25 லட்சம் என்ற விலையிலும் 1.27 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது. TVS iCube இன் விலை ரூ.1 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


ALSO READ: பனியில் பாதுகாப்பாக கார் ஒட்ட சூப்பரான 5 டிப்ஸ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR