டெக்னோ இந்தியாவில் தனது முதல் மடிக்கக்கூடிய (ஃபோள்டபிள்) போனான Phantom V Fold ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 4 போன்ற போன்களுக்கு போட்டியாக சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. ஏனெனில் மற்ற OEM களில் இருந்து நாட்டில் வேறு எந்த ஹாரிசாண்டல் ஃபோள்டபிள் தொலைபேசியும் இல்லை. இந்திய சந்தையில் சில மடிக்கக்கூடிய ஃபிளிப் போன்கள் உள்ளன, ஆனால் சாம்சங் மட்டும் ஹாரிசாண்டல் ஃபோள்டபிள் போன்களை விற்பனை செய்கிறது. இரண்டு 5G ஃபோன்களும் சிறிய வித்தியாசங்களுடன் கிட்டத்தட்ட ஒத்த அம்சங்களைக் கொண்டுள்ளன. ஆனால், இரண்டு சாதனங்களுக்கும் இடையே விலை வித்தியாசம் மிகவும் பெரியது. இந்தியாவில் Phantom V Fold போன் ரூ.90,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும். இது நாட்டிலேயே மிக மலிவான ஃபோள்டபிள் போனாக உள்ளது. வெளியீட்டு சலுகையின் ஒரு பகுதியாக பிராண்ட் இதை மிகக் குறைந்த விலையில் வழங்குகிறது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Tecno Phantom V Fold அறிமுகம் ஆனது: இந்தியாவில் இதன் விலை என்ன?


புதிய Tecno Phantom V Fold போன் இந்தியாவில் ரூ.88,888 என்ற ஆரம்ப விலையில் கிடைகிறது. நிறுவனம் ஒரே ஒரு வகையில் இந்த போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ. 77,777 என்ற சிறப்பு தள்ளுபடி விலையில் ஏப்ரல் 12 ஆம் தேதி, அதாவது இன்று முதல் இது விற்பனைக்கு கிடைக்கும். HDB வங்கி கார்டுகளுக்கு ரூ.5,000 தள்ளுபடியும் உண்டு. Samsung Galaxy Z Fold 4, ரூ.1,54,998 என்ற விலையில் நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு போன்களுக்கும் இடையே ஒரு பெரிய விலை வித்தியாசம் உள்ளது. ஆனால் சாம்சங்கின் மடிக்கக்கூடிய போன்கள் மூலம் பயனர் பெறும் அதே அளவிலான அனுபவத்தை Tecno வழங்க முடியுமா என்பதை இனிதான் பார்க்க வேண்டும். 


Tecno ஃபோனுடன் மக்களுக்கு இரண்டு வருட வாரண்டி, 5,000 ரூபாய் மதிப்புள்ள இலவச டிராலி பேக், ஆறு மாதங்களுக்குள் ஒரு முறை இலவச ஸ்கிரீன் ரீப்ளேஸ்மெண்ட் ஆகியவை கிடைக்கும். வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஸ்டாண்டுடன் இலவச ஃபைபர் ப்ரொடெக்டிவ் கேஸும் கிடைக்கும்.


மேலும் படிக்க | அட்டகாசமாய் இன்று அறிமுகம் ஆனது Vivo T2 5G: விலை, பிற விவரங்கள் இதோ


Tecno Phantom V Fold: விவரக்குறிப்புகள், அம்சங்கள்


இந்த ஃபோள்டபிள் ஃபோனில் ஒரு எரோஸ்பேஸ்-கிரேட் புதுமையான டிராப்-வடிவ ஹிஞ் உள்ளது. இது ஃபிக்ஸ்ட்-ஆக்சிஸ் ரொடேட் மற்றும் ஸ்லைடு தொழில்நுட்பம் மற்றும் ஒரு தலைகீழ் ஸ்னாப் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது மென்மையான மடிப்பு மற்றும் மடிப்பு இல்லாத அனுபவத்தை வழங்கும் என்று டெக்னோ கூறுகிறது. Samsung Galaxy Z Fold 4 உடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பெரும்பாலான அம்சங்கள் ஒரே மாதிரியாக இருப்பதைக் காணலாம். சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் மற்றும் பேட்டரி ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபாடு உள்ளது.


ஹூட்டின் கீழ் MediaTek இன் ஃபிளாக்ஷிப் டைமன்சிட்டி 9000+ சிப்செட் உள்ளது. சிப்செட் 12ஜிபி வரை LPDDR5 ரேம் மற்றும் 512GB UFS 3.1 சேமிப்பகத்தால் ஆதரிக்கப்படுகிறது. இது சமீபத்திய சேமிப்பக பதிப்பு அல்ல, கடந்த ஆண்டு ஃபிளாக்ஷிப் போன்களில் பார்க்கப்பட்டது. இந்த ஃபோள்டபிள் ஃபோன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் போதுமான பெரிய 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஃபோன் ஒப்பீட்டளவில் 4,400mAh பேட்டரி அலகுடன் 25W ஃபாஸ்ட் சார்ஜுக்கான ஆதரவையும், ஹூட்டின் கீழ் Snapdragon 8+ Gen 1 SoCயையும் கொண்டுள்ளது.


Tecno Phantom V Fold ஆனது 6.42-inch LTPO வெளிப்புற AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. சாம்சங் சாதனத்தைப் போலல்லாமல் இது ஒரு FHD+ பேனல் ஆகும். 2296 X 2000 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 7.65 இன்ச் 2K LTPO AMOLED மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே இதில் உள்ளது. திரையில் காணப்படும் உள்ளடக்கத்தின் அடிப்படையில் இந்த போன் தானாகவே 10Hz முதல் 120Hz வரை மாற்றிக்கொள்ளும்.


புகைப்படம் எடுப்பதைப் பொறுத்தவரை, பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. இதனுடன் 13-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 50-மெகாபிக்சல் 2x போர்ட்ரெய்ட் கேமரா உள்ளது. போன் திறக்கப்படும்போது வெளிப்புறத் திரையில் 32 மெகாபிக்சல் கேமராவையும் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் சென்சாரையும் ஒருவர் பார்க்கலாம். இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் இதில் உள்ளன.


மேலும் படிக்க | Flipkart Deal: ரூ. 27,999 அசத்தல் ரியல்மீ ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 999-க்கு வாங்குவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ