redBus ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய iOS செயலி இப்போது iPhone பயனர்கள் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் ரயில் டிக்கெட்டுகளை வாங்குவதற்கு உதவும். மெட்ரோ அல்லாத பகுதிகளில் அல்லது குறைந்த இணைய அலைவரிசை உள்ள இடங்களில் எந்தவித சிரமமும் இல்லாமல் பயன்படுத்தும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காக, IRCTC அங்கீகரிக்கப்பட்ட redBus, 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆண்ட்ராய்டு பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. android செயலி ஏற்கனவே 1.3 மில்லியன் பயணிகளுக்கு வெற்றிகரமாக டிக்கெட் முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ள உதவியுள்ளது. .
redRail iOS ஆப் அம்சங்கள்:
redRail பயன்பாட்டைப் பயன்படுத்தி, ரயில் முன்பதிவு முதல் ரயில் நிலை வரை - ஆல் இன் ஒன் தீர்வைப் பெறலாம். இந்த செயலி - ரயில் இருக்கும் இடத்தின் லைவ் ரிப்போர்ட், PNR நிலை, ரயில் டிக்கெட் முன்பதிவு, ரயில் டிக்கெட் விலையை சரிபார்த்தல், உடனடியாக பணத்தைத் திரும்பப் பெறுதல், வாடிக்கையாளர் சேவை மற்றும் டிக்கெட் கன்பார்ம் ஸ்டேட்டஸ் போன்ற பல அம்சங்களை கொடுக்கும்.
ரயில் லைவ் ரிப்போர்ட்
'லைவ் ரயில் இயங்கும் நிலை' விருப்பத்தைப் பயன்படுத்தி, ரயிலின் கடைசியாகப் புறப்பட்ட நிலையம், அடுத்த நிலையத்திற்கு வரும் நேரத்தைக் கணித்தல் போன்ற சமீபத்திய தகவல்களைப் பெறலாம், அதன் மூலம் பயனர்களுக்கான நேரத்தைச் சேமிக்க உதவுகிறது.
ரயில் PNR நிலை
ரெயில் பயணிகள் தங்கள் பிஎன்ஆர் நிலையை redRail செயலி மூலம் சரிபார்க்கலாம். ஆர்ஏசி அல்லது காத்திருப்புப் பட்டியலில் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | FasTag ஆன்லைனில் புக் செய்ய புதிய வசதி..! பேடிஎம் இருந்தால் போதும்
ரயில் டிக்கெட் முன்பதிவு
redRail செயலியைப் பயன்படுத்தி ஒரு பயணி எளிதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். செயலி பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். ஐந்து நிமிடங்களுக்குள் ஒருவர் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
ரயில் டிக்கெட் விலை
இந்த செயலியை பயன்படுத்தி, துரந்தோ, ராஜ்தானி, சதாப்தி, கரிப் ரத், சம்பர்க் கிராந்தி, ஹம்சஃபர், வந்தே பாரத், ஜன் சதாப்தி, ஏசி எக்ஸ்பிரஸ் மற்றும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் போன்ற பல்வேறு ரயில்களின் சமீபத்திய கட்டணத்தைப் பெறலாம்.
ரயில் கட்டணம் ரிட்டன்ஸ்
யாரேனும் தங்கள் டிக்கெட்டை ரத்து செய்தால், அந்தத் தொகை அசல் பேமெண்ட் முறையில் திருப்பித் தரப்படும். UPI பரிவர்த்தனை செய்பவர்களுக்கு, பணத்தைத் திரும்பப் பெறுவது உடனடியாக இருக்கும். கார்டு மற்றும் நெட் பேங்கிங் பரிவர்த்தனைகளுக்கு, 5 வேலை நாட்கள் வரை காத்திருக்கலாம்.
வாடிக்கையாளர் சேவை
பயனர்கள் பிரத்யேக வாடிக்கையாளர் சேவை மையத்தை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் காலை 08.00 மணி முதல் 08.00 மணி வரை இந்த சேவையில் வாடிக்கையாளர்களுக்கான உதவி வழங்கப்படும்
டிக்கெட் கன்பார்ம்
செயலியில் உள்ள 'உறுதிப்படுத்தல் நிகழ்தகவு' விருப்பத்தைப் பயன்படுத்தி, முன்பதிவு செய்யும் போது காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட்டை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஒருவர் அறிந்து கொள்ளலாம். எனவே, காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட்டை முன்பதிவு செய்யலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க இது பயணிகளுக்கு உதவுகிறது.
சலுகை என்ன?
redRail செயலியானது ரயில் முன்பதிவுகளில் 80/- தள்ளுபடியை வழங்குகிறது. BIGRAIL என்ற குறியீட்டைப் பயன்படுத்தி பயனர்கள் இந்தச் சலுகையைப் பெறலாம். redBus செயலியில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயனர்கள் அதே சலுகைக்கு SAVE80 குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ