ஐபோன் 15 ப்ரோ டிசைன் லீக்..! இத்தனை அம்சங்களா? செம அப்டேட் - மிஸ் பண்ணீடாதிங்க

ஐபோன் 15 ப்ரோ டிசைன் இப்போது இணையத்தில் லீக்காகியுள்ளது. அதன் புதிய ரவுண்டர் எட்ஜ் வடிவமைப்பு, கேமரா உள்ளிட்ட தகவல்களும் வெளியாகியிருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 10, 2023, 10:57 PM IST
ஐபோன் 15 ப்ரோ டிசைன் லீக்..! இத்தனை அம்சங்களா? செம அப்டேட் - மிஸ் பண்ணீடாதிங்க title=

ஆப்பிள் தனது ஐபோன் 14 தொடரை 2022-ல் அறிமுகப்படுத்தியது. டைனமிக் ஐலேண்ட் வந்ததால், டிசைனிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டதால் இந்த முறை போன் ஹைலைட் ஆனது. இப்போது இந்த ஆண்டு ஐபோன் 15 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வெளியாவதற்கு முன்பே ஐபோன் சீரிஸ் பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ரவுண்டர்-எட்ஜ் வடிவமைப்பு, வித்தியாசமான பட்டன்கள், கேமரா டிசைன் ஆகியவை வெளியாகியிருக்கிறது.

பெரிஸ்கோப் ஜூம் லென்ஸ்

அந்த தகவலின்படி, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் சிறிய கேமரா புரோட்ரூஷனையும் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரிஸ்கோப் ஜூம் லென்ஸ் என்றும் சொல்லப்படுகிறது. யூகங்களின்படி, ஐபோன் 15 ப்ரோவில் உள்ள கேமராக்கள் முற்றிலும் புதிய சென்சார் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும். புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு மிகச்சிறந்த மொபைலாக இருக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது.

மேலும் படிக்க | ஐபோன் ரெட்ரெயில் செயலி அறிமுகம்..! சிறப்பம்சங்கள் மற்றும் தள்ளுபடி விவரம் இதோ

USB-C போர்ட்டர்

USB-C போர்ட்கள் அனைத்து iPhone 15 பதிப்புகளிலும் சேர்க்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் வேகமாக சார்ஜ் செய்வது ஆப்பிள் சான்றளிக்கப்பட்ட USB-C கேபிள்களுக்கு மட்டுமே. வால்யூம் மற்றும் ம்யூட் பட்டன்களுக்கு பதிலாக ஹாப்டிக் இருக்கும் என்று தகவல் கூறுகிறது. இரண்டு ஹாப்டிக் என்ஜின்கள் பொத்தான் அழுத்தங்களை உருவகப்படுத்த கொடுக்கப்பட்டிருக்கும்.  

ஸ்லைடிங் ஸ்விட்ச் இருக்காது. ஆனால் ஹாப்டிக் பட்டனாக இருக்கும். பின் கண்ணாடியைப் போலவே, ஸ்கிரீன் கிளாஸில் 1.55 மிமீ பெசல்கள் மட்டுமே இருக்கும். மெல்லிய பெசல்கள் ஐபோன் 15 ப்ரோவை இதற்கு முன்பு வெளியான இதே சீரீஸ் மொபைல் மாடலைவிட குறுகியதாக இருக்கும். இருந்தாலும், திரை அளவில் மாற்றம் இருக்காது. டீப் ரெட் நிறத்தைத் தவிர, இந்த போன் வெள்ளை, ஸ்பேஸ் பிளாக் மற்றும் தங்க நிறத்திலும் வரும்.

மேலும் படிக்க | 5G Smartphones: மார்க்கெட்டில் இருக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள்..! கேமரா உள்ளிட்ட முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News