நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும், அவை அரசாங்கமாக இருந்தாலும் சரி, தனியார் நிறுவனமாக இருந்தாலும் சரி, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்க முயற்சிக்கின்றன. தனியார் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் (vi) வாடிக்கையாளர்களையும் கூட ஈர்க்கும் அளவுக்கு மிகக் குறைந்த விலையில் பல சலுகைகளை வழங்கி வரும் அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் வழங்கும் அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றி  அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

BSNL-ன் மலிவான திட்டம்


நாம் இங்கு பேசும் பிஎஸ்என்எல் திட்டத்தின் விலை ரூ.106 மட்டுமே. இந்த திட்டத்தில், ரூ.106க்கு,  3ஜிபி அதிவேக இணையம் மற்றும் 100 நிமிட இலவச அழைப்பு வசதியைப் பெறுவீர்கள். அழைப்பிற்காக வழங்கப்படும் இந்த நிமிடங்களை உள்ளூர் மற்றும் STD ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தலாம். இந்த திட்டத்தில், உங்களுக்கு SMS பலன்கள் எதுவும் வழங்கப்படாது, ஆனால் 60 நாட்களுக்கு BSNL இன் தனிப்பட்ட ரிங் பேக் ட்யூனைப் பெறுவீர்கள். இந்த ரூ.106 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.


மேலும் படிக்க | BSNL தனது 4G சேவையை ‘இந்த’ நாளில் தொடங்கலாம்; கவலையில் Jio-Airtel


பிஎஸ்என்எல் இணைய வேகம் விரைவில் அதிகரிக்கும்


BSNL வாடிக்கையாளர்களின்  எண்ணிக்கை டிசம்பர் 2021  தரவுகளின் படி 10 லட்சத்தை கடந்துள்ளது என TRAI வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், BSNL தனது நிறுவனத்தின் 4G சேவைகளை இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று அதாவது ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கலாம் என்று நம்பப்படுகிறது. பிஎஸ்என்எல் அதன் இணைய இணைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஒரு லட்சம் டவர்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.



மேலும் படிக்க | இன்ஸ்டாகிராமை போல இனி பேஸ்புக்கிலும் ரீல்ஸ் செய்யலாம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR