DeepSek AI Chatbot Full Details: DeepSeek R1 என்ற சீனாவின் செயற்கை தொழில்நுட்பத் தளம் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இதனால்தான் அமெரிக்க தொழில்நுட்ப உலகமே ஆட்டம் கண்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

OpenAI நிறுவனத்தின் ChatGPT தளத்திற்கு இது கடுமையான போட்டியளிக்கிறது. DeepSeek நிறுவனம் புதிதாக களமிறக்கியிருக்கும் DeepSeek R1, மற்ற செயற்கை தொழில்நுட்பம் அடிப்படையிலான சாட்பாட்களை அசைத்து பார்த்திருக்கிறது எனலாம். அந்த வகையில், DeepSeek R1 மற்றும் ChatGPT இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து, எதனால் அதிக பயன் என்பதை இங்கு காணலாம்.


DeepSeek R1 vs ChatGPT


DeepSeek R1 மற்றும் ChatGPT இரண்டும் மனிதர்களை போல் எழுத்தை சார்ந்தவற்றை படிக்கும், அதேபோல் எழுதும் திறன் கொண்ட Large Language மாடல் (LLMs) எனலாம். அதாவது, உங்களுக்கு தேவையான ஆராய்ச்சியை மேற்கொள்வது, பிரோக்கிராம் செய்வதற்கு கோடிங் எழுதுவது, நீங்கள் எழுதியவேண்டியவற்றை எழுதிக்கொடுப்பது ஆகியவற்றில் இது உதவும். நீங்கள் தேர்வு எழுதுகிறீர்கள் என்றால், அந்த கேள்விகளை இவற்றிடம் கேட்டால், இவையே விரிவாக விளக்கம் அளித்துவிடும்.


DeepSeek தொடங்கப்பட்டது எப்படி?


DeepSeek நிறுவனம், சீனாவின் தென்கிழக்கு நகரமான ஹாங்க்சோவில் கடந்த 2023ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இது ஓபன் ஸோர்ஸ் DeepSeek-V3 மாடலால் இயக்கப்படுகிறது. லியாங் வென்ஃபெங் என்பவரால் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இவர்தான் தற்போது DeepSeek நிறுவனத்தின் CEO ஆவார். இவருக்கு வயது 40 ஆகும். தகவல் மற்றும் எலக்ட்ரானிக் பொறியியல் பட்டதாரியான இவர் Nvidia A100 சிப்கள் மூலம் இந்த பெரிய செயற்கை தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தை கட்டமைத்திருக்கிறார் என கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது இந்த சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பது வேறு கதை.


மேலும் படிக்க | ChatGPTக்கு போட்டி கொடுக்க ஹனுமான் தயார்! இந்திய தொழில்நுட்பத்தை களமிறக்கும் முகேஷ் அம்பானி!


DeepSeek ஹிட்டானது எப்படி?


நீங்கள் DeepSeek R1 சேட்பாட்டை இலவசமாகவே டவுன்லோட் செய்துகொள்ளலாம். இவை இந்தியாவில் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் மற்றும் ஆண்ட்ராய்ட் பிளே ஸ்டோர் ஆகியவற்றிலும் கிடைக்கிறது. இதனை அதன் இணையதளத்தில் இருந்து கூட இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம். சில கூடுதல் சிறப்பமான அம்சங்கள் மற்றும் பெரியளவிலான பயன்பாடுகளுக்கு குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும் ChatGPT உடன் ஒப்பிடும்போது, DeepSeek கட்டணம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால்தான், இப்போது AI தொழில்நுட்ப உலகில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முன்னேறியிருக்கிறது.


DeepSeek மூலம் என்ன செய்யலாம்?


DeepSeek R1 எழுச்சியால், அமெரிக்க சந்தைகளில் தொழில்நுட்ப பங்குகள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இழப்பைச் சந்தித்துள்ளன. மேலும், DeepSeek R1 Python மற்றும் ஜாவா போன்ற பிரோகிராம்மிங் லாங்வேஜ்களில் கைத்தேர்ந்ததாக இருக்கிறது. எளிதாக இவற்றில் கோடீங் செய்கிறது. மறுபுறம், ChatGPT நகைச்சுவைகளை கூறுவது, கதை சொல்வது போன்ற படைப்பாற்றலில் சிறந்து விளங்குகிறது.


DeepSeek மொபைல் மற்றும் கணினியில் பயன்படுத்துவது எப்படி?


இந்த புதிய DeepSeek R1 சேட்பாட்டை எப்படி மொபைலிலும், கணினியிலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது என்பதை இங்கு காணலாம். முன்னர் கூறியதுபோல், ஆப்பிளின் பிளே ஸ்டோர் அல்லது ஆண்ட்ராய்ட் கூகுள் பிளே ஸ்டோரில் DeepSeek R1 என தேடவும். அதன்பின் அந்த செயலியை கண்டுபிடித்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். அதன்பின் உங்களின் இ-மெயில், ஜி மெயில் போன்றவற்றை பயன்படுத்தி லாக்-இன் செய்துகொள்ளலலாம்.


கணினியில் DeepSeek R1 சாட்பாட்டை பயன்படுத்த அதன் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு முதில் இ-மெயில், ஜி மெயில் கணக்குகளை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். உங்கள் தொடர்பு எண் +86 என தொடங்கினால் அதன் வழியாகவும் பதிவு செய்யலாம். ஆனால், சில தொழில்நுட்ப காரணங்களால் தற்சமயம் யாராலும் புதிதாக பதிவு செய்ய முடியாத வகையில், இணையதளம் முடங்கியிருக்கிறது. ஒருவேளை நீங்கள் பதிவு செய்திருந்தால் அதனை பயன்படுத்தலாம். ChatGPT தளத்தை பயன்படுத்துவது போல் இதனையும் பயன்படுத்தலாம்.


மேலும் படிக்க | டிராய் எச்சரிக்கைக்கு பணிந்தது ஜியோ... உடனே கொண்டுவந்த புதிய ரீசார்ஜ் திட்டம் - முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ