ChatGPT... இந்தியாவில் 90% அலுவகங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு..!!

ChatGPT: இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் முதல், அலுவகத்தில் பணி புரிபவர்கள் வரை, வேலையை எளிதாக்கவும், தனது திறன்களை வளர்த்துக் கொள்ளவும் செயற்கை நுண்னறிவை பயன்படுத்துகின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 6, 2024, 08:44 PM IST
  • ChatGPT என்னும் செயற்கை நுண்ணறிவு கருவி.
  • தகவல் தொழில் நுட்ப துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்.
  • இந்தியாவில் நிறுவன ஊழியர்கள் மத்தியில் ChatGPT பயன்பாடு.
 ChatGPT... இந்தியாவில் 90% அலுவகங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு..!! title=

இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது. 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட சாட்ஜிபிடி (ChatGPT) என்னும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு இந்தியாவில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது என தரவுகள் கூறுகின்றன. மாணவர்கள் முதல், அலுவகத்தில் பணி புரிபவர்கள் வரை, வேலையை எளிதாக்கவும், தனது திறன்களை வளர்த்துக் கொள்ளவும் செயற்கை நுண்னறிவை பயன்படுத்துகின்றனர்.

இந்தியர்கள் தங்கள் வேலைகளில் AI சாட்போட்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் என தரவுகள் கூறுகின்றன.  புதிதாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், இந்தியாவில் 90% க்கும் அதிகமான அலுவலகங்கள்  AI சாட்போட்களைப் பயன்படுத்துகின்றன என கூறப்பட்டுள்ளது.  டெஸ்க்டைம் என்னும் நிறுவனம் 297 நிறுவனங்கள் மற்றும் அவற்றில் பணிபுரியும் 14,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் ஆய்வை நடத்தியதில், இந்தியாவில் AI கருவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் AI கருவிகளின் பயன்பாடு

செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துவது குறித்த சாதகங்கள் மற்றும் பாதகங்கள் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், டெஸ்க்டைம் (Desktime) என்னு நிறுவனம் இந்தியாவில் AI கருவிகளின் பயன்பாடு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆய்வுக்கு பிறகு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 2023 முதல் மார்ச் 2024 வரையிலான தரவுகளில், இந்தியாவில் கடந்த சில மாதங்களில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கருவிகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு செயற்கை நுண்னறிவு கருவிகளில் பயிற்சி அளித்து, அதன் மூலம் அலுவலகப் பணிகளைச் சிறப்பாகச் செய்ய அவர்களுக்கு உதவுவதாக தரவுகள் கூறுகின்றன. இதன் மூலம் ஊழியர்களின் திறன் மேம்பட்டு, வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இந்த ஜூலையில் இந்தியாவில் களமிறங்கும் புத்தும் புதிய பைக் மற்றும் கார்கள்...

இந்தியாவில் நிறுவன ஊழியர்கள் மத்தியில் ChatGPT பயன்பாடு

இந்தியாவில் சுமார் 40%க்கும் அதிகமான ஊழியர்கள் ChatGPT என்னும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை ஏதோ ஒரு வகையில் பtஹொழில்நுட்பத்தைஐப் பயன்படுத்துகிறார்கள் என்பதை டெஸ்க்டைம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ChatGPT என்னும்  செயற்கை நுண்ணறிவு கருவி

ChatGPT என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு AI கருவியாகும். எளிய கேள்விகளுக்கு மட்டுமின்றி, சிக்கலான விஷயங்களை அறிந்து கொள்ளவும் எழுதவும் உதவும் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் பயன்பாடு, வரும் காலங்களில் இன்னும் வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லா விதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் ஆற்றல் கொண்ட AI கருவிகளைப் பயன்படுத்துவதில் தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்வதால் மட்டுமே, வேலையில் உள்ள மக்களால் தாக்கு பிடிக்கும் நிலை ஏற்படலாம் என்றாலும் மிகையில்லை. மேலும், ஏஐ தொழில்நுட்பத்தினால், பணி நீக்கம் ஏற்படலாம் என்ற அச்சமும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.

தகவல் தொழில் நுட்ப துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்

உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப கூகுள் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து, அவர்களுக்கு பதிலாக AI கருவிகளைப் பயன்படுத்துவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பறி போக கூடும் என்ற அச்சம் ஒரு புறம் எழுந்தாலும், தகவல் தொழில் நுட்பம் தவிர வேறு துறைகளில் இதற்கான பாதிப்பு இருக்காது என்கின்றனர் நிபுணர்கள். 

மேலும் படிக்க | Jio vs Airtel vs Vi: 1ஜிபி டேட்டா இப்போ இவ்வளவா? எதில் விலை குறைவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News