முதலீடு செய்தா நல்ல லாபம் கிடைக்குமா? ஐடியா கொடுக்க இந்த செயலிகள் இருக்க கவலையேன்?
Home Apps Market Masters: சம்பாதித்த பணத்தை எப்படி எங்கே எப்போது சேமித்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்பதைத் தெரிந்துக் கொண்டு முதலீடு செய்வது புத்திசாலித்தனம் மட்டுமல்ல, நல்ல கலை... இந்த கலையை சொல்லிக் கொடுக்கும் செயலிகள் இவை...
பணம் சம்பாதிப்பதற்கு விழி பிதுங்கும் நிலையில், வருமானத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதும் அதில் இருந்து கிடைக்கும் லாபம் அதிகமாக இருப்பதை உறுதிப்படுத்துவதும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. 21 ஆம் நூற்றாண்டில் இருக்கும் நமக்கு முதலீடு செய்வது என்பது சிரமம் என்றாலும், செய்யும் சிறிய முதலீட்டையும் புத்திசாலித்தனமாக செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஆனால், தொழில்நுட்ப புரட்சி, முதலீட்டு யோசனைகளை சொல்வதிலும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை எளிதாகக் கண்காணிக்கலாம், பங்குச் சந்தை நிலையைச் சரிபார்த்துக்கொள்ளலாம் மற்றும் முதலீடு தொடர்பான முடிவுகளைத் தங்கள் கைக்குள் அடக்கிவிடலாம்.
முதலீட்டு செயலிகள் பல இருந்தாலும், அவற்றில் சிறந்தவை என்பதைத் தெரிந்துக் கொள்வது நல்லது. நம்பிக்கையான முதலீட்டு முடிவுகளை எடுக்க இந்த செயலிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.
Groww
பல முதலீட்டு செயலிகள் இருந்தாலு, Groww செயலியின் முதலீடு யோசனைகள் சிறப்பாக இருக்கிறது. இந்த செயலி, தரகு, கமிஷன் கட்டணம், விரைவான மற்றும் எளிதான KYC என அருமையாக இருக்கிறது. மேலும், கவர்ச்சிகரமான, வண்ணமயமான வடிவமைப்புகள் இல்லாத எளிய செயலியாக இருக்கிறது.
The Paytm Money
Paytm Money ஒரு முதலீட்டு செயலி என்பதுடன், இந்தியாவின் முன்னணி Fintech நிறுவனங்களில் ஒன்றாகும். இது முக்கியமாக பங்கு முதலீடு, பரஸ்பர நிதிகள், இடிஎஃப்கள், ஐபிஓக்கள் மற்றும் டிஜிட்டலில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பரிந்துரைகளைக் கொடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. இதன் பரிந்துரைகள், பரஸ்பர நிதிகளுக்கான தளம் மற்றும் போர்ட்ஃபோலியோ நிர்வாகத்திற்கு உதவ அறிக்கைகளை வழங்குகிறது. Paytm Money இதற்காக தரகு கட்டணம் எதையும் வசூலிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், கணக்கு வைத்திருப்பவர் டிமெட்டீரியலைஸ் செய்யப்பட்ட கணக்கைத் திறக்க வேண்டிய அவசியமில்லை.
Indmoney
இந்த முதலீட்டு பயன்பாடானது உங்களது குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டுகளின் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்குவதால், புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய உதவியாக இருக்கும். பங்குச்சந்தையின் ரிஸ்க், விவரக்குறிப்பு, SIP அங்கீகாரம், பல டிமேட் கணக்குகள் மற்றும் பலவற்றுடன் தொடர்புடைய தனிப்பயனாக்கப்பட்ட முதலீடுகள் தொடர்பான தகவல்களைப் பெறுவீர்கள்.
Etmoney
இது ஒரு நேரடி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு பயன்பாடாகும், இதன் மூலம் நீங்கள் பரஸ்பர நிதிகள், பங்குகள், ஐபிஓக்கள், எஃப்டிகள், என்பிஎஸ் மற்றும் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம். கமிஷன் கட்டணம் எதுவும் இல்லை என்ப்னது குறிப்பிடத்தக்கது. ஆவணங்கள் தேவையில்லாத இந்த செயலியில் ஆன்லைனில் புதிய கணக்கைத் திறப்பது, முதலீட்டு மேலாண்மை சேவைகள் போன்ற அம்சங்கள் உள்ளன. உங்கள் போர்ட்ஃபோலியோவின் செயல்திறனைக் கண்காணிக்கவும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கான உதவிக்குறிப்புகளைப் பெறலாம்.
மேலும் படிக்க | அமெரிக்க அரசியலில் ஏ.ஆர். ரஹ்மான்... கமலா ஹாரிஸிற்கு ஆதரவு - என்ன செய்தார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ