சன்ரூஃப் கார் வாங்கினா மட்டும் போதாது... இந்த விஷயம் தெரியலைன்னா சிக்கல்ல மாட்டிப்பீங்க! கவனம்...

Sunroof Car :  தற்போது, செடான், எஸ்யூவி என பெரும்பாலும் அனைத்து காருக்கும் சன்ரூஃப் வசதி இருக்கிறது. காரின் மேற்கூரையை திறந்து வைத்துக் கொண்டு செல்வதற்கு பலருக்கும் விருப்பம் இருக்கிறது...

Tips To Operate Sunroof Car When Roof Is Open : சன்ரூஃப் காரை பயன்படுத்தும்போது வாகனத்தின் வேகம் என்னவாக இருக்க வேண்டும்? தவறு செய்தால் அதற்கு கொடுக்கும் விலை பெரிதாக இருக்கும் என்பதால் கவனம் அவசியம்...

1 /8

சன்ரூஃப் கார் மிகவும் ஸ்டைலானது மட்டுமல்ல, காரில் சென்றுக் கொண்டிருக்கும்போதே, வானத்தையும், இயற்கையையும் அனுபவிக்க விரும்புபவர்களுக்கு ஒரு வரம்...

2 /8

குழந்தைகள் முதல் இளைஞர்கள், முதியவர்கள் என பலருக்கும் வேகமாக செல்லும்போது வானத்தை பார்க்கும் ஆவல் இருப்பது இயல்பு. எனவே, சிலர் வேகமாக காரை ஓட்டும் போது சன்ரூஃப் ஜன்னலை திறக்கின்றனர். 

3 /8

வாகனம் வேகமாக சென்றுக் கொண்டிருக்கும்போது, சன்ரூஃப் திறக்கும் போது அது என்ன பிர்ச்சனைகளைக் கொடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?  

4 /8

சன்ரூஃப் திறந்திருக்கும் போது, ​​காரின் வேகம் மணிக்கு 70-80 கிமீக்கு மேல் அதிகரிக்கக்கூடாது. இது அதிக வேகத்தில் காற்றின் அழுத்தத்தை அதிகரிப்பதால், ஓட்டுநருக்கு பிரச்சனையைக் கொடுக்கும். அதிக சப்தம் ஓட்டுநரை நிலைகுலையச் செய்யும் 

5 /8

நெடுஞ்சாலையிலோ அல்லது அதிவேக சாலையிலோ காரின் மேற்கூரையைத் திறந்து வைப்பதைத் தவிர்க்கவும். அதிவேகமாக வாகனம் செல்லும் போது, கூரை திறந்திருப்பது பாதுகாப்பானது அல்ல  

6 /8

பலத்த காற்று, மழை அல்லது மாசு அதிகமாக இருக்கும் போது, ​​சன்ரூஃப்பை மூடி வைப்பது நல்லது, இதனால் வாகனத்தின் உள்ளே இருக்கும் சூழல் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

7 /8

உங்கள் எஸ்யூவியின் சன்ரூஃப் கூரையைத் திறக்கும் போதெல்லாம், உங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது, மேலும் சாலை நிலைமைகளை மனதில் வைத்துக்கொள்வது அவசியமானது

8 /8

பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை