ஆப்பிளின் ஆப் ஸ்டோர் கொள்கைகள் கூகுள் ப்ளே ஸ்டோரின் கொள்கைகளை விட வலிமையானவை என்று கூறப்படுகிறது.  நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகள் பல தீங்குகளை ஏற்படுத்துகின்றன.  அந்த வகையில் தற்போது 1,00,000 பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட கார்ட்டூனிஃபையர் செயலி, பேஸ்புக் தகவல்களை திருடுவதாக பிராடியோ புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கார்ட்டூனிஃபையர் செயலி கிராஃப்ட்ஸ்ஆர்ட் கார்ட்டூன் போட்டோ டூல்ஸ் என்கிற பெயரில் கிடைக்கிறது, இதனை இனி பதிவிறக்கம் செய்யமுடியாது.  இதுகுறித்து கூகுள் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ப்ளீப்பிங் கம்பியூட்டருக்கு தீங்கை ஏற்படுத்தும் செயலி பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்.  மேலும் இந்த செயலியை ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள் அனைவரும்  உடனடியாக இந்த செயலியை டெலீட் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ஐபோன் கேமராவைப் பயன்படுத்தி டிவிட்டரில் GIF உருவாக்குவது எப்படி?


இந்த செயலியில் பயனர்கள் ஒரு புகைப்படத்தை பதிவேற்றியதும் அதை கார்ட்டூன் வடிவமாக மாற்றி தருகிறது.  பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொபைல் பாதுகாப்பு நிறுவனமான பிராடியோ தான் கார்ட்டூனிஃபையர் செயலியில் பேஸ் ஸ்டீலர் என்கிற ட்ரோஜன் இருப்பதை கண்டறிந்தது.  இந்த செயலிக்குள் செல்வதற்கு முன் திரையில் பேஸ்புக் லாகின் செய்யக்கோரி ட்ரோஜன் காண்பிக்கிறது.  திரையில் தேவையான தகவல்களை பதிவிட்டதும் செயலியானது பயனர்களை கமெண்ட் மற்றும் கண்ட்ரோல் சர்வரான  zutuu[.] இன்ஃபோ [வைரஸ் டோடல்] க்கு அனுப்புகிறது.  அதன்பின்னரே மோசடி கும்பல் பயனர்களின் தகவல்களை திருட ஆரம்பிக்கிறது.  


இந்த செயலியை பயன்படுத்த பயனர்கள் முதலில் அவர்கள் பேஸ்புக் தகவல்களை பதிவேற்றிவிட வேண்டும்.  அதன் பின்னர் ஒரு புகைப்படத்தை கிராஃபிக்காக மாற்றுவதற்கு தேவையான அம்சத்தை இந்த செயலி வழங்குகிறது.  பின்னர் கிராஃபிக்காக மாற்றப்பட்ட போட்டோவை பதிவேற்ற அல்ல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த செயலி அனுமதி அளிக்கிறது. பொதுவாக ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவர்கள் அதிலும் குறிப்பாக ஆண்ட்ராய்டு பயனர்கள் எப்போதும் ஒரு செயலியை பதிவிறக்குவதில் சற்று விழிப்புடனேயே இருக்க வேண்டும். அதிலும் பயோமெட்ரிக் டேட்டா போன்ற முக்கியமான தகவல்களை செயலிகள் கேட்கும் பட்சத்தில் அவற்றை கவனமாக கையாள வேண்டும்.  



ஒரு செயலியை நம்முடைய ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யும் முன் சிலவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும்.  அதாவது ஒரு செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு முன்னர் ஆப் டெவலப்பரை சரிபார்க்க வேண்டும்.  பின்னர் ரேட்டிங்ஸ் மற்றும் ரிவியூக்களையும் சரிபார்க்க வேண்டும், மால்வேர் உள்ள செயலிகளுக்கு மோசமான ரிவியூக்கள் இருக்கும் அதனை நாம் பதிவிறக்கம் செய்யக்கூடாது.  அடுத்ததாக உங்களது தனிப்பட்ட தகவல்களான பெயர், போன் நம்பர், முகவரி, பயோமெட்ரிக்ஸ் மற்றும் சில ரகசிய தகவல்களை எப்போது போலியான ஒரு செயலியில் நீங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.  மேலும் மைக்ரோபோன்ஸ், கான்டாக்ட்ஸ் மற்றும் பிற டேட்டாக்களை அனுமதிக்க கோரும் செயலிகளை ஒருபோதும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.


மேலும் படிக்க | ஒரே சிம்கார்டில் இரண்டு எண்கள் பயன்படுத்துவது எப்படி? ஸ்மார்ட்போன் டிரிக்ஸ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR