ஏர்டெல்லின் பண்டிகை கால சலுகை... தினம் 2GB டேட்டாவுடன்... 22+ OTT சேனல்கள்
ஏர்டெல் நிறுவனம் பண்டிகை கால சலுகையாக `Festive Offer` என சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. இதில், குறிப்பிட்ட தொகைக்கான ரீசார்ஜ் பிளான்களில் வாடிக்கையாளர்கள்பல நன்மைகளைப் பெறுவார்கள்.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், சில ஆபர்களை வழங்கியுள்ளது. ஜியோவின் போட்டியாளரும், நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லும் பண்டிகை சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ 8வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 10 வரை, சில குறிப்பிட்ட பிளான்களில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு, 700 ரூபாய் மதிப்பிலான பலன் கிடைக்கும் என அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் பண்டிகை கால சலுகையாக "Festive Offer" என சில சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. இதில், சில குறிப்பிட்ட தொகைக்கான ரீசார்ஜ் பிளான்களில் வாடிக்கையாளர்கள்பல நன்மைகளைப் பெறுவார்கள்.
ஏர்டெல் வழங்கும் பண்டிகை கால சலுகைகளுடன் கூடிய புதிய ரீசார்ஜ் திட்டங்கள் சில நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை பாரதி ஏர்டெல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 11, 2024 வரை 6 நாட்களில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே பண்டிகை ஆஃபர் கிடைக்கும். ரூ.979, ரூ.1029 மற்றும் ரூ.3599 ஆகிய 3 சிறப்பு ரீசார்ஜ் திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் பல நன்மைகளை பெறலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர்டெல்லின் ரூ.979, ரூ.1029 மற்றும் ரூ.3599 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டங்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும். இதில் டேட்டா மற்றும் OTT ஸ்ட்ரீமிங் சேவைகளில் பல நன்மைகளைப் பெறுவார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் வழங்கும் ரூ. 979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs.979 Prepaid Plan)
ஏர்டெல்லின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினம் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் வசதி மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தில் 22க்கும் மேற்பட்ட OTT செயலிகளுக்கான இலவச சந்தா ஆகியவை அடங்கும். இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இது தவிர, இந்த திட்டத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தக் கூடிய, 10 ஜிபி டேட்டா கூப்பனும் கிடைக்கிறது. கூப்பன் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.
ஏர்டெல் வழங்கும் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs. 1029 Prepaid Plan)
ஏர்டெல்லின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டத்தில், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் வசதி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆகியவை கிடைக்கும். இதன் வேலிடிட்டி 84 நாட்கள். இது தவிர, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தில் 22க்கும் மேற்பட்ட OTT செயலிகளுக்கான இலவச சந்தா உடன் குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தக் கூடிய, 10 ஜிபி டேட்டா கூப்பனும் கிடைக்கிறது. கூப்பன் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.
ஏர்டெல் ரூ. 3599 ப்ரீபெய்ட் திட்டம் ((Airtel Rs.3,599 Prepaid Plan)
ஏர்டெல்லின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில், தினம் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் வசதி கிடைக்கும். இதன் வேலிடிட்டி 365 நாட்கள் செல்லுபடியாகும். இது தவிர, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தில் 22க்கும் மேற்பட்ட OTT செயலிகளுக்கான இலவச சந்தா உடன் குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தக் கூடிய, 10 ஜிபி டேட்டா கூப்பனும் கிடைக்கிறது. கூப்பன் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.
மேலும் படிக்க | இண்டர்நெட் இல்லாமலும் UPI சேவையை பயன்படுத்தலாம்... இதை செய்தால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ