புதுடெல்லி: இந்தியாவில் PUBG ஐ இந்தியா தடை செய்திருந்தாலும், இந்தியாவில் PUBG Mobile India விளையாட்டு செயலி எப்போது தொடங்கப்படுகிறது என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை.  ஆனால், பிரபலமான யுத்த விளையாட்டுகளுக்கான ஆவல் துளி கூட குறையவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எப்போது இந்தியாவில் புதிய விளையாட்டு விளையாட முடியும் என பலரும் ஆஅலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். PUBG மொபைல் இந்தியாவில் எப்போது வரும் என்பது தெரியாது.
 
PUBG Mobile India தொடர்பான பல அறிவிப்புகள் வெளியாகின்றன, இந்தியாவுக்காக ஒரு புதிய வலைத்தளத்தைத் தொடங்குவது, முதல் டீஸரை அதன் சமூக ஊடக கணக்கில் வந்திருப்பதாக பல வதந்திகள் உலா வருகின்றன.  எது எப்படியிருந்தாலும் மொபைல் விளையாட்டுகளில் மிகவும் பிரபலமான யுத்த விளையாட்டுகளில் ஒன்றாக PUBG உருவெடுத்துள்ளது.


ஆனால் PUBG மொபைல் கேம், அதன் உலகளாவிய பதிப்பைத் தவிர, பிராந்திய பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு பல பதிப்புகளை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அந்தந்த  பிராந்திய விளையாட்டு வீரர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. PUBG மொபைல் மிகவும் பிரபலமான நாடுகளின் பட்டியல் இங்கே.


கொரியா மற்றும் ஜப்பான்: கொரியா மற்றும் ஜப்பான் பிராந்தியங்களில் PUBG மொபைல் மிகவும் பிரபலமானது. PUBG கார்ப்பரேஷனால் வெளியிடப்பட்ட இந்த மொபைல் கேமில் ‘டொன்காட்சு மெடல்’ (‘Donkatsu Medal’) எனப்படும் பிரத்யேக நாணயத்தைக் கொண்டுள்ளது, இது விளையாட்டுக் கடையில் இருந்து கிரேட்களை (crates) வாங்க பயன்படுகிறது.


Also Read | FAU-G vs PUBG: இரண்டு விளையாட்டுகளுக்கும் இடையிலான 5 வித்தியாசங்கள்


தைவான் (Taiwan): PUBG மொபைல் TW அல்லது தைவான் (Taiwan) என்று அழைக்கப்படுகிறது PUBG மொபைலின் இந்த பதிப்பு ஹாட் கூல் கேம்ஸ் (HotCool Games) வெளியிட்டது மற்றும் இது கூகிள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் தைவானின் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (Apple App Store) கிடைக்கிறது.  


சீனா: ‘அமைதிக்கான விளையாட்டு’ (Game for Peace) என்று அழைக்கப்படும் PUBG மொபைலின் இந்த பதிப்பு ஒவ்வொரு சீன மொபைல் விளையாட்டாளரையும் மிகவும் கவர்ந்தது. டென்சென்ட் கேம்ஸ் (Tencent Games) 2019 மே மாதத்தில் விளையாட்டை புதிய பெயரில் வெளியிட முடிவு செய்து, சீன அதிகாரிகள் விதித்த அனைத்து கட்டுப்பாடுகளையும் பூர்த்தி செய்வதையும் உறுதிசெய்தது.


வியட்நாம் (Vietnam): VNG கேம் பப்ளிஷிங் வெளியிட்ட PUBG மொபைலின் இந்த பதிப்பு வியட்நாமில் மற்றொரு சாதனையை உருவாக்குகிறது. வியட்நாமில் இருந்து பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், வியட்நாமிய மொழி பயன்படுத்தப்படுகிறது.


Also Read | FAU-G விளையாடத் தயார்! முன்பதிவு செய்வது எப்படி? Tips இதோ...


இந்தியா: PUBG மொபைல் இந்தியா இன்னும் செயல்பாட்டில் உள்ளது. பல சீன பயன்பாடுகளை இந்தியா தடைசெய்துள்ள நிலையில், PUBG கார்ப்பரேஷன் கடந்த மாதம் PUBG மொபைலின் இந்திய பதிப்பை வெளியிடுவதாக அறிவித்தது, இந்த புதிய பதிப்பு, PUBG Mobile India என அறியப்படும். இருப்பினும், இந்த விளையாட்டு இன்னும் இந்தியாவில் வெளியிடப்படவில்லை. ஆனால் எதுவும், எந்த நேரத்திலும் நடக்கலாம்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR