முகேஷ் - நீதா அம்பானி மட்டுமல்ல... பல பிரபலங்களின் கையில் இருப்பது ‘இந்த‘ போன் தான்.!!
சமீபத்தில் முகேஷ் அம்பானி நீதான் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டும் இல்ல உலகெங்கிலும் அதுதான் பேசு பொருளாக சில காலத்திற்கு இருந்தது. இன்னமும் கூட அதைப்பற்றி பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் முகேஷ் அம்பானி நீதா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டும் இல்ல உலகெங்கிலும் அதுதான் பேசு பொருளாக சில காலத்திற்கு இருந்தது. இன்னமும் கூட அதைப்பற்றி பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளம் எங்கும், முகேஷ் அம்பானி நீதா அம்பானி குடும்பம் பற்றிய தகவல்கள், அவர்கள் அணிந்திருக்கும் மிக உயர்ந்த ஆடைகள் பற்றிய விவரங்கள், அணிந்திருந்த கைக்கடிகாரம் குறித்த தகவல்கள், அவர்கள் வீட்டில் உள்ள வசதிகள் பற்றிய விவரங்கள் என, பல விஷயங்கள் பேசி பொருளாக ஆகின.
இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி பயன்படுத்தும் போன் என்ன?
இந்நிலையில், இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவியான நீடா அம்பானி பயன்படுத்தும் போன் என்ன என்பதை அறியும் ஆவல் நிச்சயம் பலருக்கு இருக்கும். ஊருக்கெல்லாம் ரூபாய் 1500 மதிப்பிலான ஃபோன்களை விற்கும், ரிலையன்ஸ் கம்பெனி குடும்பத்தின் போன் என்னவாக இருக்கும் என்று அறிய யாருக்குத்தான் ஆவல் இருக்காது.
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் போன்
கடந்த ஜனவரி மாதம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன், வந்திருந்தார். அப்போது அவர் கையில் இருந்த போன் மிகவும் பேசும் பொருளாக மாறியது. அவர் கையில், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் போன் (iPhone 15 Pro Max)வைத்திருந்ததை பலர் பார்த்தனர். மிக விலை உயர்ந்த ஃபோனான ஐபோனின் இந்த மாடல் விலை சுமார் இரண்டு லட்சம் என்று கூறப்படுகிறது. இதன் மாடலின் 256 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 1 டிபி ஸ்டோர்டு வேரியண்டின் விலை சுமார் ரூ.2 லட்சம் என்ற அளவில் உள்ளது.
மேலும் படிக்க | முகேஷ் அம்பானியை கணவராக எப்படி தேர்வு செய்தேன்? நீதா அம்பானி சொல்லும் டிப்ஸ்
நாட்டிலுள்ள பல பிரபலங்கள் பயன்படுத்தும் போன்
முகேஷ் அம்பானி மட்டுமின்றி அவரது மனைவி நீட்டா அம்பானிடமும் இதே போன் தான் உள்ளது. அதுமட்டுமல்ல நாட்டிலுள்ள பல பிரபலங்கள் இந்த போனை தான் பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஃபோனில் கேமரா தர பற்றி கூற வேண்டியதில்லை. மிக சிறப்பான கேமிராவைக் கொண்டது. இது தவிர, வாட்டர் ப்ரூப் அம்சம் கொண்டது. மிகவும் வலிமையானது என்பதோடு, அதன் ப்ராசஸர், செயல்திறன், வடிவமைப்பு முதல் அம்சங்கள் வரை அனைத்தும் ஆப்பிள் போனில் எல்லாமே ஏ ஒன் ரகம் தான். அதன் தோற்றமும் பிரீமியம் போன்களுக்கு உரிய ஆடம்பரத்துடன் இருக்கும். எல்லா வகையிலும் இந்த ஃபோன் மற்ற போன்களை விட மிகவும் சிறப்பு என்பதால், தான் நாட்டில் உள்ள பிரபலங்கள் இதனை வைத்திருக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ