பொதுவாக போஸ்ட்பெய்டுடன் ஒப்பிடும்போது ப்ரீபெய்ட் திட்டங்களில் பல நன்மைகள் உள்ளன. ஆனால் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் சிறப்புப் பலனைப் பற்றிப் பேசும்போது, இதில் ​​பயனர்களுக்கு டேட்டா தீருவதோ அல்லது கால் அவுட் ஆகிவிடுமோ என்கிற டென்ஷன் தேவையில்லை. பயனர்கள் தொடர்ந்து காலிங் செய்யலாம் மற்றும் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம், இதற்காக அவர்கள் ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. எனவே அதன்படி நீங்கள் Vi பயனராக இருந்து, உங்கள் ப்ரீபெய்டு இணைப்பை போஸ்ட்பெய்டுக்கு மாற்ற விரும்பினால் மற்றும் சிறந்த போஸ்ட்பெய்டு திட்ட பலன்களைப் பெற விரும்பினால், இன்று உங்களுக்காக நாங்கள் சில வலுவான Vi திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். அவை என்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Vi போஸ்ட்பெய்டு பிளான்: விலை என்ன, பலன் என்ன?
நாம் பேசும் Vi இன் திட்டத்தின் விலை 401 ரூபாய் ஆகும். இது நிறுவனத்தின் மலிவான போஸ்ட்பெய்ட் திட்டமாகும், இருப்பினும் இதில் நிறைய நன்மைகள் கொடுக்கப்படுகின்றன. அதன்படி இந்தத் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பேசுகையில், நீங்கள் இதில் 50ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள், அதேபோல் இதில் நீங்கள் 200ஜிபி மாதாந்திர டேட்டா ரோல்ஓவர் பெறுவீர்கள். இதனுடன், இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3000 எஸ்எம்எஸ் ஐயும் நீங்கள் பெறுவீர்கள். 


மேலும் படிக்க | யாரும் கண்டே பிடிக்க முடியாத ஸ்பை கேமரா! விலை விவரம் இதோ 



இந்த திட்டத்தில் கிடைக்கும் மற்ற சில நன்மைகளைப் பற்றி பேசுகையில், இதில் உங்களுக்கு மதியம் 12:00 மணி முதல் காலை 6:00 மணி வரை அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது, அதாவது நீங்கள் விரும்பும் அளவுக்கு இணையத்தைப் பயன்படுத்தி திரைப்படத்தைப் பார்க்கலாம். இதில் சிறப்பு என்னவென்றால், இந்த இன்டர்நெட்டின் வேகம் முற்றிலும் இலவசம் மற்றும் அன்லிமிடெட் ஆகும். இது மட்டுமின்றி, இந்த திட்டத்தில் உங்களுக்கு OTT நன்மைகளும் வழங்கப்படுகின்றன, அந்தவகையில் இதில் நீங்கள் SonyLIV மொபைல் சந்தா மற்றும் Vi Movies மற்றும் TV ஆப்ஸ் மற்றும் Hungama Music App, Vi Games மற்றும் Night Binge ஆகியவற்றின் சந்தாவைப் பெறுவீர்கள். 


அதேபோல் இந்த திட்டத்தில், நீங்கள் நாட்டில் எங்கும் இலவச அன்லிமிடெட் காலிங் நன்மையையும் பெறுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஏர்டெல்லை வம்பிழுக்கிறதே ஜியோவுக்கு வேலையா போச்சு! 2 ஜிபி டேட்டா ரேட் இவ்வளவு தான் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ