என்ன பேஸ்புக்கில் 27 கோடி போலி கணக்கா?
சமுக வலைதளமான பேஸ்புக் பயனாளர்களில் மொத்தம் 27 கோடி போலி கணக்குகள் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் சமீபத்தில் தனது காலாண்டு வருமான அறிக்கையை வெளியிட்டது. அதில் அதிகரித்துள்ள போலி கணக்குகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக ஒரு கோடி போலி கணக்குகள் என்கிற அளவில் இருந்ததாகவும், ஆனால் தற்போதைய ஆய்வின்படி 27 கோடி போலி கணக்குகள் இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
கடந்த காலாண்டு கணக்கைக் காட்டிலும், இந்த காலாண்டில் 6% போலி கணக்குகள் அதிகரித்து உள்ளன. மொத்தத்தில் பேஸ்புக்கில் இருக்கும் கணக்குகளில் 13% அதாவது 27 கோடி கணக்குகள் போலி என்று அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.
இதனால் கணக்குகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க அந்நிறுவன பொறியாளர்கள் உழைத்து வருகிறார்கள் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.