Screenshot எடுத்தால் எச்சரிக்கும் வசதியை அறிமுகம் செய்யும் பேஸ்புக்!
இனிமேல் மெசஞ்சரில் (messenger) End-to-End encryption வசதியையும், screenshot எடுத்தால் எச்சரிக்கும் வசதியையும் பேஸ்புக் பயனர்கள் பெறமுடியும்.
Facebook மெசஞ்சரில் group chat மற்றும் அழைப்புகளுக்கு End-to-End encryption (E2EE) வசதியை வழங்கப்போவதாக மெட்டா அறிவித்துள்ளது. இந்த E2EE ஒரு முக்கியமான மற்றும் பாதுகாப்பு வசதியாகும், இந்த வசதியானது ஒரு சில பயனர்களுக்கு மட்டுமே முன்பு கிடைத்த நிலையில் தற்போது மெசஞ்சரைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இது கிடைக்கப்போகிறது. ஆனால் இது default ஆக இயங்காமல் நாம் அந்த வசதியை on செய்தால் மட்டுமே இந்த End-to-End encryption வசதியை chat களில் நாம் பெறமுடியும்.
ALSO READ | Tech Tips: லேப்டாப்பின் டச்பேட் பணிபுரியவில்லையா? இவற்றை செய்து பாருங்கள்
இந்நிறுவனம் Facebook மெசஞ்சரின் opt-in end-to-end encrypted செய்யப்பட்ட chat களுக்கு கூடுதலாக ஒரு அட்டகாசமான அம்சத்தையும் வழங்க இருக்கிறது. அதாவது ஸ்கிரீன்ஷாட் எடுப்பதை எச்சரிக்கை செய்யும் விதமாகவும் இதில் வசதி அமைந்துள்ளது. இனிமேல் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டால் பேஸ்புக் மெசஞ்சர் பயனர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் இந்த அம்சம் வரும் வாரங்களில் கிடைக்கும்.
end-to-end encrypted வசதி இல்லையென்றாலும் கூடுதலான சில அம்சங்களை இனிமேல் பெறலாம். இதில் GIFகள், ஸ்டிக்கர்கள் மற்றும் ரியாக்ஷன்ஸ் மற்றும் குறிப்பிட்ட சில மெஸேஜுக்கு மட்டும் பதிலளிக்கும் வசதி போன்றவற்றையும் வழங்குகிறது. மேலும் அப்டேட் செய்வதன் மூலம் மெசேஜை forward செய்வதிலும் புது வசதியையும் பெறலாம். forward செய்யவேண்டியதை தேர்ந்தெடுத்த பின் ஒரு நபருக்கோ அல்லது பலருக்கோ அல்லது குழுவிற்கோ அனுப்பலாம், புதிய குழுவை கூட நீங்கள் உருவாக்கி forward செய்யலாம்.
மேலும் end-to-end encrypted chatகளில் உண்மையான கணக்குளை அறியும் பொருட்டு Verified badge-கள் காண்பிக்கப்படும். இதில் மீடியாக்களை எளிதாக சேமிக்கும் வகையில் அதனை long-press செய்தால் போதும், வேண்டிய மீடியாவை சேமித்துக்கொள்ளலாம். அதேபோல நம் புகைப்படங்கள் அல்லது வீடியோவை மற்றவருக்கு அனுப்பும்போது அதனை நாம் எடிட் செய்து அனுப்பிக்கொள்ளலாம். அதன்மூலம் stickers, scribbling, adding text, crop, audio போன்ற எடிட்டிங் வசதிகளை செய்துகொள்ளலாம்.
ALSO READ | JIO vs Airtel: 5 G நெட்வொர்க்கில் எது பெஸ்ட்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR